Wednesday, 16 December 2015

அழகு குறிப்புகள்









இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.
இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும்.
வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.
பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்!
அதேப்போன்று அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.
 பனிக்காலம்


சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் மினு மினுக்கும்.
தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.
மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.
இவையெல்லாவற்றையும் விட வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும்.
மேற்கூறியவற்றில் உங்களுக்கு வசதியானவற்றை பின்பற்ற ஒரு சில நிமிடங்கள்தான் தேவை. அதை செய்தால் பள பளக்கும் மேனியை நிச்சயம் பெறலாம்.
அழகு குறிப்புகள்,வறண்ட சருமக்காரர்கள்,குளிர்காலம், பனிக்காலம்,alagu kurippu,alagu,sarumam,face,skin tones,skin

கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

பெண்கள் பச்சைத் தக்காளிப்பழங்களைத் தினமும் சாப்பிட்டு வரவேண்டும். சாப்பிட்டு வந்தால், தோல் கொஞ்சம் சிவப்பாக மாறும். தோல் சுருக்கம் மாறும். நிறமும் மாறி, சுருக்கமும் மறைந்தால் பார்க்க அழகாக இருக்கும்.

கோழி முட்டையை உடைத்து வெள்ளைப் பாகத்தை மட்டும் ஒரு கோப்பையில் ஊற்ற வேண்டும். இதில் கொஞ்சம் எலுமிச்சம் பழச் சாறைக் கலக்க வேண்டும். கொஞ்சம் பாதாம் பருப்பை அரைத்து இதில் சேர்க்க வேண்டும். சேர்த்து, மூன்றையும் கலக்கி, பெண்கள் தங்கள் முகததில் தடவிக் கொள்ள வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து சோப்புப் போட்டு முகத்தைக் கழுவிவிட வேண்டும். இப்படிச் செய்து வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.


தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலை முடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையும் தவிர வேறு எதையும் தலையில் பட விடக் கூடாது.

முகத்தில் பரு இருக்கிறதா? இருந்தால், பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் விகாரமுள்ள, மாறாத வடுக்கள் விழுந்து விடும். எருமைப் பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.

பெண்களும் சரி, ஆண்களும் சரி, தங்களுக்கு ஊளைச் சதை விழாமலிக்கப் பழம் சாப்பிட்டு வரவேண்டும். பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் ஊளைச் சதை கரையும். பப்பாளிப்பழம் ஒன்றுக்குத்தான் ஊளைச் சதையைக் குறைக்கும் சக்தி உண்டு.

பனிக்காலத்தில் சிலருக்குத் தோலில் சில இடங்களில் வெடிப்புத் தோன்றும். வெடிப்புத் தோன்றிய இடங்களில் கொஞ்சம் வாஸ்லைனைத் தடவி வரவேண்டும். தடவி வந்தால் வெடிப்பு மறைந்துவிடும்!

தங்கள் கண்களுக்கு மை தீட்டிக் கொள்ளும் பழக்கமுள்ள பெண்கள், படுக்கப் போகும்போது சோப்புப்போட்டு முகத்தைக் கழுவிவிட்டு அதன் பின்னரே படுக்க வேண்டும். கண் மையுடன் தூங்கக் கூடாது. கண்மையுடன் தூங்கினால் கண்கள் சீக்கிரம் கெட்டுப் போகும்.

குளித்தவுடன் உடல் முழுவதும் சிறிது பவுடர் போட்டுக் கொண்டால் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.

முகத்தில் தோல் உரிந்தால் அதைப் போக்க சிறிது கிளிசரின், எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவுங்கள். பிறகு சோப்பு போட்டு முகத்தைக் கழுவுங்கள். உரிந்த தோல் வந்து விடும்.

தேங்காயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தோல் பளபளப்புக் குறையாமலும், கோளாறு ஏற்படாமலும் தேங்காய் பார்த்துக் கொள்கிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்களும், இருதயநோய் உள்ளவர்களும் தேங்காயைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

முகத்தை, சோப்பு மட்டும் போட்டுக் கழுவிக் கொண்டிருக்கக் கூடாது. பயித்தம் மாவு, சிகைக்ககாய் ஆகியவற்றையும் கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும். இப்படிச் செய்தால்தான் முகத்தில் இருக்கும் பளபளப்பு குறையாமல் இருக்கும்.

பெண்கள் தினமும் படுக்கப் போகும் போது புருவங்களிலும் இமைகளிலும் கொஞ்சம் விளக்கெண்ணையைக் தடவிக் கொண்டால், புருவங்களிலும் இமைகளிலும் முடி நன்றாக வளரும். பெரிதாக வளரும். இதனால் அழகு அதிகமாகும

முகத்தில் எண்ணெய் வடிகிறதா? இதைப் போக்கத் தினசரி காலையிலும் இரவு படுக்கப்போகும் போதும் முகத்தில் எலுமிச்சம் பழத்தை அறுத்துக் தேயுங்கள். எண்ணெய் பசை போய்விடும்.





பொடுகை விரட்ட


             காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். 

         அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.




ஆரோக்கிய குறிப்பு
 
பெண்கள் வெயிலில் வெளியில் போகும்போது இருபது நிமிஷங்களுக்குமேல் தொடர்ந்து வெயிலில் இருக்கக் கூடாது. கால்மணி நேரத்துக்கு ஒரு தடவை எங்கேயாவது நிழலில் கொஞ்ச நேரம் நின்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து வெயிலில் நின்றால் பெண்களின் அழகு கெட்டுப் போகும். முகம் கருங்கும். உடம்பின் பளபளப்பும் போய்விடும்.
அடிக்கடி குளிர்ந்த பானங்களைக் குடிப்பவர்களும் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறவர்களும் சாக்லேட் தின்பவர்களும் காப்பி குடிப்பவர்களும் பருமனாகி விடுகிறார்கள். உடம்பு இளைக்க வேண்டும் பெருக்க கூடாது என்று நினைக்கிறவர்கள் இவற்றையெல்லாம் தொடக்கூடாது. தள்ளிவிட வேண்டும்.
தினமும் காலையில் வெந்நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தைப் பிழிய வேண்டும்; அதில் ஒரு ஸ்பூன் தேனைக் கலக்க வேண்டும்; அதைப் பருக வேண்டும். இப்படிச் சாப்பிட்டு வந்தால் அவர்கள் ஒல்லியாக இருப்பார்கள். அவர்கள் குரல் இனிமையாக இருக்கும்.


பொதுவான குறிப்பு
         சில பெண்களுக்கு முதுகு அகலமாக இருக்கும்; தினமும் நீண்ட தூரம் நடக்க வேண்டும். நடந்தால் இவர்களுடைய முதுகின் அகலம் குறையும்; முதுகு அழகாக மாறும். 

     சில பெண்களுக்கு கன்னம் உப்பிப் போய்க் கிடக்கும். இப்படி கன்னம் பெருத்த பெண்கள் தினமும் கொஞ்ச நேரம் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு உரக்கப் படிக்க வேண்டும். தினமும் வெந்நீரில் உப்பைப் போட்டு கன்னங்களுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கன்னங்கள் வலுப்பெறுகின்றன. ஊளைச் சதை குறைகிறது. 
     மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் மூக்கின் நுனியில் கொஞ்சம் அதிகமாக மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டும். அப்படி போட்டுக் கொண்டால் அவர்கள் மூக்கு பார்ப்பதற்குச் சின்னதாகத் தெரியும்.

    மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கும் பெண்களுக்குக் கண்களின் அழகு கொஞ்சம் குறையும் மூக்குக் கண்ணாடி அணியும் அந்தப் பெண்கள் கொஞ்சம் பட்டையாகவே தங்கள் கண் இமைகளுக்கு மை தீட்டிக் கொள்ள வேண்டும்.

எடை குறைய

          பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

முகம் பொலிவடைய வேண்டுமா



1. ஒரு தேக்கரண்டி ஓட்ஸ், இரண்டு தேக்கரண்டி தக்காளிச்சாறு, இரண்டு தேக்கரண்டி கேரட் சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி , அரை மணி நேரத்துக்கு பின் கழுவவும்.
2. தோல் நீக்கிய திராட்சையை முகத்தில் தடவி சிறிது நேரம் சென்ற பின்  கழுவுவதும் முகத்துக்கு பொலிவைத் தரும்.
3. முகத்திலுள்ள பருக்களை நீக்க ஒரு பல் பூண்டு அல்லது துண்டு கிராம்பை அரைத்து அதை விரல் நுனியில் தொட்டு பரு மீது வைத்தால்,அது அப்படியே அமுங்கிவிடும்.
4. முகத்தை அடிக்கடி ப்ளீச்சிங் செய்வது சரியானதல்ல. ஏனெனில் சிலவிதமான ப்ளீச்சிங்கில் அடங்கியுள்ள அமோனியா போன்ற ரசாயனப் பொருட்கள் முக சருமத்துக்கு கேடு விளைவிக்கக்கூடும். குறிப்பாக முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது ஒவ்வாமையை விளைவிக்கும். மேலும் ப்ளீச்சிங் அதிகமானால், முகத்தில் சுருக்கங்கள் ஏற்படவும் காரணமாகிறது.
5. அடிக்கடி முகத்தை கழுவுவதனால்,முகச் சருமத்தின் இயல்பு மாற்றமடையக்கூடும்.  குறிப்பாக சோப்பு உபயோகித்து இப்படிக் கழுவுவதால், சோப்புகளில் உள்ள காரத் தன்மை சருமத்தை வறட்சிக்குத் தள்ளிவிடும்.
6. எண்ணெய் மயமான சருமம் உடையவர்கள் முகம் கழுவும்போது பச்சைப் பயறு மாவு உபயோகிப்பது நல்லது. இரவு உறங்கச் செல்லும் முன்னர் முகத்தை சுத்தமாகக் கழுவுவது நல்லது. எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில், முகப் பருக்கள் ஏற்பட சாத்தியம் அதிகம். தினமும் அல்லது அடிக்கடி முருங்கைக்கீரை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.  பொரித்த மற்றும் வறுவல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கட்டாயமாக முகம் கழுவ சோப்பை உபயோகிக்கக்கூடாது. பயத்தமாவு அலல்து கடலைமாவு உபயோகித்து முகம் கழுவவேண்டும்.
7. நமது தோற்றத்துக்கு முதிர்ச்சி ஏறாமல் தவிர்த்து  நம்மைப் பாதுகாப்பது ஆன்டி ஆக்ஸிடென்டுகளாகும். மிகவும் முன்னதாகவே ஏற்படும் முதிர்ச்சி, முகத்தின் சுருக்கங்கள் ஆகியவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த ஓர் அளவுக்கு இந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகளால்தான் இயலும்.  ஆப்பிள், ஆரஞ்சு, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், வெங்காயம், தக்காளி கேரட், பூசணி மற்றும் கீரைவகைகள் ஆகியவற்றிலும் இவை அதிகம் காணப்படுகிறது. இவைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பானது.  பத்து அல்லது பன்னிரண்டு டம்ளர் தண்ணீர் தினமும் அருந்த வேண்டும். சருமத்தின் பளபளப்புக்கு தண்ணீர் மிக அவசியமானது.
8. சிலருக்கு சருமம் வறட்சியாக இருக்கும்.  சோப்புகளை அடிக்கடி மாற்றுவது சருமத்தின் வளர்ச்சியைக் கூட்டக்கூடும். இவர்கள் அரிசிமாவு, பால், கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றை கலந்துமுகத்தில் பூசிக் கொள்வதால், வறட்சியைத் தடுக்கலாம். குளித்து முடித்ததும் ஒரு மாய்ச்சரைஸர் உபயோகித்து உடல் முழுவதும்  மசாஜ் செய்வதும் வறண்ட சருமத்துக்கு நல்லது.



Tags : azhagu kurippu for shining face | beauty tips for shining face | shining face beauty tips | அழகு குறிப்புகள் | முக அழகு குறிப்புகள் | அழகு |










1 comments:

  • Nisha says:
    6 December 2017 at 03:13

    நான் தினமும் பார்க்கும் இணையத்தளம் https://news.ibctamil.com/ta/beauty-tips/ பெண்களுக்கான அழகு குறிப்புகளை சிறப்பாக தொகுத்துள்ளது. நீங்களும் பாருங்கள் ! பயன் பெறுங்கள் !

Post a Comment