Friday, 18 December 2015

விந்தணு குறைபாடு





ஆண்கள் விந்து முந்துதலை தடுக்க சில முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும். அதாவது சுய இன்பம் காணும் செயல் இதற்கு நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுய இன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல் நிறுத்தி இடைவெளி விட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டும்.
சாதரணமாகவே ஆண்கள் சுய இன்பம் காணும்போது அவசாரம் அவசரமாகவே செயல்படுவார்கள். யாராவது பார்த்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது மனத்தில் உள்ள ஆசை தீர்ந்து போவதற்குள் ஆசையைத் தீர்த்து விடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின் போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதனால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்க பழக வேண்டும். உறுபப் எழுந்து நிற்பதில் தொடங்கி அது விந்து கக்கி வீழ்வது வரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்து செயல்பட வேண்டும்.
விந்து வெளியாகும் நேரத்தில் செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படி செய்து பார்ப்பது அவசியம். என்றாவது ஒருநாள் கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்சிப்பது பயன்தராது. தினமும் இரு முறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தை கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும் போதுதான் நல்ல பலன் தரும்.
முதலில் வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு எண்ணெய் அல்லது ஜெல்லி போன்ற பொருள்களை பயன்படுத்தி சுய இன்பத்தில் ஈடுபட்டு செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாக கண்டுகொண்ட பிறகு பெண்களுடன் உறவு மேற்கொள்ளும் போதும் இதைப் பயன்படுத்தலாம். இடைவெளி விட்டு செயல்படுதல், விந்து வெளிப்படுதலை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஏற்றுக் கொள்ளபட்டுள்ளது.
சுடுநீரில் குளித்தால் ஆண்மை பாதிக்குமா ?

படுக்கை அறையில் உறவு கொள்வதை விட பாத்ரூம், கார், கிச்சன் என விதவிதமான வித்தியாசமான இடங்களில் உறவு கொள்பவர்கள் அதிகம் இருக்கின்றனர். பெரும்பாலோனோர் சுடுநீர் பாத்டப்பில் உறவில் ஈடுபட விரும்புகின்றனர் இதற்கு காரணம் அங்கு உறவு கொண்டால் காண்டம் உபயோகிக்க வேண்டியதில்லை என்ற நம்பிக்கைதான். ஆனால் இது தவறான கருத்து என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சுடுநீராக இருந்தாலும், குளிர்ச்சியான நீராக இருந்தாலும் விந்தணு பெண்ணுறுப்பின் வழியாக செல்வதை முறையான கருத்தடை சாதனத்தைத் தவிர வேறு எதுவுமே தடுக்க முடியாது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வழியாக பரவும் நோய்களைத் தடுக்கக் கூடிய தன்மையும் சுடுநீருக்குக் கிடையாது. சுடுநீரில் உறவு கொண்டாலும் கட்டாயம் ஆணுறை அணியவேண்டும் என்று கூறும் மருத்துவர்கள் சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும் என்று அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு காரணங்களினால் ஆண்களின் விந்தணு உற்பத்தி பாதிப்பிற்குள்ளாகிறது. பெண்களுக்கும் கரு முட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலோனோர் மலடாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் காரணிகளை மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர் தெரிந்துக்கொள்ளுங்கள்.

விந்தணு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும். நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட விந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்ளும். அங்கு வெப்பம் அதிகரிக்கும்போது உற்பத்தி நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.
மனித உடலுக்கு என்று குறிப்பிட்ட வெப்பநிலை அவசியம். அதற்கேற்ப தான் மனித உடலானது படைக்கப்பட்டிருக்கிறது. ஆண்களின் உடலில் அதிக சூடு ஏறினால் விந்தணு உற்பத்தி பாதிக்குமாம். எனவேதான் சூடு நிறைந்த பாத்டப்பில் அதிக நேரம் குளிப்பதோ, உறவில் ஈடுபடுவதோ கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். இது விந்தணு உற்பத்தியை கண்டிப்பாக பாதிக்குமாம். அதேபோல் ஆண்களுக்கு அதிகமாக காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் நேரத்திலும் உறவில் ஈடுபடக்கூடாதாம்.
ஆண்கள் அணியும் இறுகலான பேண்ட் ஆண்மைக்கு ஆபத்தாகிறதாம். அதேபோல் டைட்டான உள்ளாடை அணிவதும் விந்தணு உற்பத்தியை பாதிக்கிறதாம். அதேபோல் லேப் டாப் ஐ மடியில் வைத்து உபயோகித்தால் அதில் உள்ள கதிர்வீச்சு மூலம் விந்தணு உற்பத்தி பாதிக்கிறதாம். அதிக அளவில் செல்போன் உபயோகிப்பவர்களுக்கும்,செல்போனை பெல்ட்டில் அணிபவர்களுக்கு விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்பட்டு ஆண்மை குறைபாடு.
உடல் பருமனால் பாதிக்கப்பட்டாலோ ஆண்மை பாதிப்பு ஏற்படும். அதே போல் மது, சிகரெட், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கும் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுகிறதாம். ஒரு சிலருக்கு ஹார்மோன் பிரச்சினைகளாலும், மரபணு சிக்கல்களினாலும் விந்தணு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள். மேலும் மன அழுத்தம், மனஇறுக்கம் உள்ளிட்ட காரணங்களினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்று கூறும் மருத்துவர்கள் சரியான பரிசோதனையின் மூலம் பாதிப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இயற்கை முறையில் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும்  வழிகள்

அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே இளம் தலைமுறை ஆண்கள் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இன்றைய இளம் தலைமுறையினரின் முன்பு உள்ள முக்கியமான பிரச்சனை குழந்தையின்மை தான். இதற்கு உணவுப் பழக்கமும் முக்கிய காரணமாக இருக்கிறது.
உடல் ஆரோக்கியம், உணவு பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் துரித உணவகங்களில் கிடைக்கும் உணவுகளும், ருசிக்காக அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமும் இளைஞர்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 35 சதவிகித ஆண்கள் இதுபோன்ற குறைபாடினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதேபோல் அதிக புகைப்பழக்கம் மதுப்பழக்கம், மன அழுத்தம், போன்றவையும் ஆண்களின் விந்தணு குறைபாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேசமயம் ஒமேகா 3 கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியில் குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.ஆண்களின் குறைபாட்டினை போக்க சித்த மருத்துவத்தின் மூலம் நம் முன்னோர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அவற்றை பின்பற்றினால் விந்தணு குறைபாடு நீங்கி நல்ல பலன் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
பாதம், கல்கண்டு
தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும். இரவு படுக்கைக்கு செல்ல மூன்று மணி நேரத்திற்கு முன்பே முழு மாதுளம்பழம் சாப்பிட வேண்டும்.
வால் முளகு, பாதம்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.
அரசம்பழம்
அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும். அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.
முருங்கைப் பூ கசாயம்
முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை ஒருடம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும். நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
இதேவேளை ரெட்மீட் எனப்படும் மாட்டுக்கறியை சாப்பிட்டால் இளம் வயதில் மரணமடைய நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலை நாடுகளில் பன்றிக்கறி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டுக்கறி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே கறிக்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது.
பன்றியில் கோழிக்கறியை விட மையோக்ளோபின் (Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டுக்கறியைவிட மிகவும் குறைவு. கறி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.
மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.
மாட்டுக்கறி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தினசரி மாட்டுக்கறி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.
நான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டுக்கறி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, உள்ளிட்ட நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. இதற்குக் காரணம் மாட்டுக்கறியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் உள்ளிட்டவை காணப்படுகின்றன. இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அதேபோல ஹாட் டாக் எனப்படும் துரித உணவுகளை சாப்பிடும் 20 சதவிதம் பேர் இளம் வயதில் மரணமடைவடைதும் கண்டறியப்பட்டது. அதேசமயம் மாட்டுக்கறிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது. எனவே மாட்டுக்கறியை குறைவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
உணவே மருந்து
பொதுவாக, செக்ஸ் உந்துதலானது, சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவனையும் நிமிர்ந்து உட்காரச் செய்யக்கூடிய ஈர்ப்பு சக்தி உடையது. உடல் உறவுக்கும், உணவுக்கும் தொடர்பு உண்டு. நாம் தினசரி சாப்பிடும் சாதா ரண சமையலுக்குப் பயன்படும் பொருட்கள் வயோதிகர்களையும் முறுக்கேறிய வாலிபர்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. கறிவேப்பிலையின் மகத்துவத்தை உணராமல் எப்படி தூக்கி ஏறிகிறோமோ, அதைப் போல் வாசனைப் பொருட்களின் மகத்துவத்தை அறியா மல் நாம் அதனை கறிவேப்பிலை போலவே பயன்படுத்தி வருகிறோம்.
பெருங்காயம்
ஆண்மைகுறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும் காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம். வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப் படுகிற பெருங்காயத்தில் இனிய விறு விறுப் பூட்டும், உணர்ச்சிப் பெருக்கேற்படுத்தும் ஆற்றல் உள்ளது. சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். சமையலில் தொடர்ந்து பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள். ஆண்மை குறைபாட்டால் உங்கள் மன தில் நீண்ட நாட்களாக இருக்கும் “பெருங்காயம்”, பெருங்காயத்தால் ஆறிவிடும்.
ஏலக்காய்
ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட் டால் நல்ல பலன் தெரியும்.
ஆனால் ஜாக்கிரதை, இதை அதிக அளவில் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவிரகளை ஏற்படுத்தி ஆண்மை குறைவு பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என்று மூலிகை ஆராய்ச்சியாளர் கள் எச்சரிக்கின்றனர்.
மிளகு
மிளகு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது. மிளகு உணர்ச்சியைத் தூண்டி உத்வேகம் அளிக் கும் ஆற்றல் உள்ளது. பண்டைய கிரேக்கர்கள், ரோமனியர்கள் கூட உணவில் மிளகு சேர்த்து வந்தனர். அரேபியர்கள் பல்வேறு விதங்களில் மிளகை உட்கொண்டனர். நான்கைந்து மிளகு களைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகள் முறுக்கேறும், தாம்பத்யத்துக்கு முன்பு சில மிளகுகளை வாயில் போட்டு மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.
லவங்கம்
லட்டு போன்றவற்றில் லவங்கம் சேர்க்கப் படுவதுண்டு. பண்டைய சீனர்கள் இதன் பயனை நன்கறித்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பியர்களும் லவங்கத்தின் மதிப்பை நன்கு உணர்ந்திருந்தனர் 1642-ம் ஆண்டின் சுவிடன் நாட்டைச் சேர்ந்த மூலிகை விஞ்ஞானி லவங்கத் தைப் பற்றி எழுதியிருந்தார்.
பூண்டு
பூண்டுக்கு இல்லற சுகத்தை தரும் ஆற்றல் நிரம்ப உண்டு. அதன் மகத்துவத்தை எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமனியர்கள், சீனா மற்றும் ஜப்பானியர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். சாப்பிட்டரத எளிதில் ஜீரணமாக்கி, பசியை உண்டாக்கும் ஆற்றல் பூண்டில் இருப்பதே அதன் பலம். பொதுவாக, ஜீரணமான பின்னரே, அதாவது சாப்பிட்டு ஒரு மணிநேரம் அல்லது அதற்குப் பிறகே உறவில் ஈடுபடவேண்டும் என்று கூறப் படு கிறது. அந்த பணியை பூண்டு எளிதில் செய்வதால், பூண்டை உட்கொண்டு உறவில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி
இஞ்சி சாப்பிட்டு வந்தால் கணவன் – மனைவி இருவரும் மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடலாம். இஞ்சிக்கு ஆண்மையைப் பெருக் கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டைய இலக்கி யங்களில் இஞ்சிச்சாறுடன், தேன் மற்றும் பாதி வேக வைக்கப்பட்ட முட்டையைக் கலந்து ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்படமுடியும் என்று எழுதப்பட்டுள் ளதே அதற்கு சான்று.
சாதிக்காய்
சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், தம்பத்திய வாழ்க்கையில் மிகையான பலன்களை அனுபவிக்கலாம். சாதிக்காய், தேன், பாதி வேக வைத்த முட்டை ஆகிய மூன்று கலவையும் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கவல்லவை என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் உறவுக்கு முன்பே இந்த கலவையை சாப்பிட்டால், நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கின் றனர்.
ஓமம்
உணர்ச்சியைத் தூண்டும் ஓமத்தின் ஆற் றலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் அறிந்துள்ளனர். இதன் விதைகள் “தைமால்” என் னும் சத்து அதிகம். ஓமத்தை பொடியாக்கி வைத் துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியங் கொட்டையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பருப்பை (ஓம விதைக்கு சம அளவில்) பொடி செய்து, அதனை பொடி செய்த ஓமத்து டன் கலக்கி, நெய், வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் வதக்க வேண்டும். ஒரு ஸ்பூன் கல வையை பால் மற்றும் தேனுடன் கலந்து தாம்பத்ய முன் சாப்பிடலாம்.
வெங்காயம்முருங்கைபாதாம்
இது தவிர நாம் தினசரி உபயோகிக்கும் காய் கறிகள், தின்பண்டங்களில் கூட ஆண்மையை அதி கரிக்கும் பொருட்கள் அடங்கியுள்ளன. சிறிய வெங்காயத்தில் ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. முருங்கை விதையில் ஆண்மையைப் பெருக்கும் “பென்-ஆயில்” உள்ளது. வல்லாரை இலையை துவையலாக செய்து சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.
பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றிலும் நரம்பை முறுக்கேற்றும் சக்தி அதிகமாக இருக்கிறது. வெற்றிலைக்கு ஆண்மையைப் பெருக்கும் ஆற்றல் உண்டு. நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் அமுக்கராகிழங்கை செக்ஸ் மன்னன் என்றே அழைக்கலாம்.
இது எல்லாம் கடையில் குறைந்த விலைக்கே கிடைக்கும் கடலை உருண்டைக்குக் கூட ஆண்மை யைப் பெருக்கும் மகத்துவம் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்டவற்றை தேவைக்கேற்றபடி முறையாக சாப்பிட்டு வந்தால் உங்கள் செக்ஸ் பிரச்சனைகள் பறந்தோடி விடும்.
 உடலுறவு குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டிய  விஷயங்கள்
உடலறவு சார்ந்த தெளிவும், சரியான புரிதலும் நமது தலைமுறையினரிடம் இல்லை. இதுமட்டுமின்றி, நம்மிடையே வளர்ந்து வரும் மேற்கத்திய கலாச்சார மோகமானது இதற்கான முக்கிய காரணமாக விளங்குகிறது. உடை கலாச்சாரம், பழக்கவழக்கம், பார்டி செல்லுதல் போன்றவை தெரிந்தும், தெரியாமல் இருக்கும் காரணங்களாக இருந்து வருகிறது.
பிறந்த குழந்தைக்கு சிறு வயது முதலே, பேஷன் உடைகள் என்ற பெயரில் குட்டை பாவாடை மற்றும் தொப்புள் தெரியும் உடைகளை உடுத்தி வளர்ப்பதால், அந்த குழந்தைக்கு வளர்ந்த பிறகு கூச்சம், வெட்கம், தீய தீண்டுதல் போன்றவை பற்றிய எண்ணங்கள் முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுவிடுகிறது..
உடலுறவுக்காக காத்திருங்கள்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பை வளர்த்த, கற்பித்த நமது சமுதாயத்தில் தான், இன்று பல முக்கிய நகரங்களில் திருமணதிற்கு முன்னரே உடலுறவு என்பதை மிக சகஜமாக எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இதிலும் கல்லூரி மாணவர் மத்தியில் இது காட்டுத்தீ போல பரவி வருகிறது. உடல்களின் இணைப்பு என்பது மனதின் இணைப்பிக்கு பிறகு ஏற்பட வேண்டும். காதலுக்கும், இச்சைக்கும் வேறுபாடு தெரியாமல் உடலுறவில் சிக்கி வாழ்க்கையை சிதைத்து கொள்ள வேண்டாம்
பயன்காரமானது அல்ல
உடலுறவு என்பது பயங்கரமானது அல்ல, சரியான புரிதல் மற்றும் தன்னிலை அடக்குதல் எனும் இரண்டின் பற்றாக்குறை தான் இன்று சமூகத்தில் பல கற்பழிப்பு சம்பவங்கள் ஏற்பட காரணமாக இருக்கிறது. கொஞ்சம் தோல் தெரிந்தாலும் இச்சை எண்ணம் அதிகரிக்கிறது எனில் இதற்கு நமது கலாச்சார மாற்றமே காரணம். உடலுறவு என்பது இயற்கையான ஒன்று, இதை பயங்கரவாதமாக மாற்ற வேண்டாம்
இறந்துவிட போவதில்லை
உடலுறவில் ஈடுபடவில்லை என்றால் யாரும் இங்கு இறந்துவிட போவதில்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நாம் அனைவரும் அடைய வேண்டியவை எண்ணற்றக் கணக்கில் இருக்கும் போது, சிறு இச்சைக்கு மயங்கி வாழ்வினை வீணாக்க வேண்டுமா? இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.
உடலுறவு தவறானது அல்ல
பெரியவர்கள், பருவ வயதை எட்டும் போதிலிருந்தே உடலுறவு என்பது தகாத செயல்பாடு என்று, தவறான கண்ணோட்டத்தில் கற்பிப்பது தவறு. உடலுறவை பற்றி தெளிவான தகவல்கள் பருவ வயதில் கற்பித்தல் வேண்டும். உடலுறவு என்பது மிகவும் சாதாரணம் என்று தெரிந்தால், கற்பழிப்பும், திருமணத்திற்கு முந்தைய உடலுறவும் குறைய வாய்ப்புகள் உண்டு.
எண்ணற்ற காதல்
காதல் தோல்விக்கு பிறகு மற்றுமொரு காதல் வருவது இயல்பு, இயற்கை. ஆனால், ஆசையை காதலாக உருவகம் செய்துக் கொள்வது தவறு. சிறு, சிறு ஆசைகளை தவறுதலாக காதல் என்ற கண்ணோட்டத்தில் காண வேண்டாம். இதனால் தான் இன்று பல காதல்கள், கண்மூடி திறக்கும் முன்னரே கலைந்துவிடுகிறது.
நல்ல உதாரணங்கள்
அவன் செய்தான், அங்கு நடந்தது என கண்ட உதாரணங்களை கண்டு வாழ்க்கையை ஒப்பேற்றிவிட்டு போகாமல், நல்ல உதாரணங்களை கண்டு, உங்கள் காதல் வாழ்க்கை சிறக்க முயற்சி செய்யுங்கள்.
விந்தணு,விந்தணு உற்பத்தி,விந்தணு எண்ணிக்கை,விந்தணு குறைபாடு,விந்து 
,விந்தணுவின் உற்பத்தி

0 comments:

Post a Comment