ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
இறைவன் படைப்பிலே எத்தனையோ ஜீவராசிகள் இப்பூவுலகில் தோன்றி மறைந்தாலும் மனிதப்பிறவியே அனைத்திலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. மற்ற ஜீவராசிகளுக்கெல்லாம் ஐந்தறிவைப் படைத்த இறைவன் மனிதனுக்கு மட்டுமே ஆறறிவைப் படைத்துள்ளான். ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு? மற்றவர்களுக்குக் கிடையாது.
இப்படிப்பட்ட மனிதப் பிறவியில் தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் எவ்வளவோ ஆசைகள் அபிலாஷைகள் இருந்தாலும் அவை எல்லாம் நிறைவேறுகிறதா என்றால் இல்லை என்றே எண்ணத் தோன்றும். காரணம் நாம் நினைக்கும் அல்லது நாம் விரும்பும் செயல் அனைத்தும் நம் கையில் இல்லை என்பதே உண்மையாகும். காரணம் மனித வாழ்க்கை பஞ்ச பூதங்களோடும் கிரகங்களோடும் வாணியலோடும் சம்பந்தப்பட்டு சுற்றிச் சுழன்று வருவதே காரணமாகும்.
ஒருவர் முயற்சி செய்யாமலே வெற்றியடைவதும் சிலர் எவ்வளவு முயற்சி செய்தும் எண்ணிய செயல் நிறைவேறாமல் போவதற்கும் அடிப்படைக் காரணம் அவரவர் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இச்சென்மத்தில் பலன்களை அனுபவிப்பதே ஆகும். இவற்றைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுவதே ஜோதிடமாகும்.
ஜோதிடம் வேதங்களோடும், மதங்களோடும், கிரகங்களோடும் நட்சத்திரங்களோடும், பஞ்சபூதங்களோடும் வானியல் கணிதங்களோடும் கணித சூத்திரங்களோடும் முற்பிறவி மறுபிறவி முன்ஜென்ம பாவ புண்ணியங்களோடும் தொடர்புடையது.
கிரகங்கள் எதுவும் நிற்பதில்லை, அவை தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சேர்த்தே சுற்றி வருகின்றன. இந்த கிரகங்கள் சுற்றி வரும் நிகழ்வே பெயர்ச்சி என்கிறோம். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு கிரகங்கள் செல்வதே கிரகப் பெயர்ச்சி என்று குறிப்பிடுகிறோம்.
நவக்கிரகங்கள்: மொத்தம் 9 ஆகும். இதில் ராகு, கேது நீங்கலாக மற்றவையெல்லாம் வானில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் கிரகங்கள் ஆகும். நவக்கிரகம் 7 ஆகும். இதில் ராகு கேது ஆகிய இரண்டும் சேர்ந்து 9 ஆகக் குறிப்பிடுகிறோம்., இந்த ராகு கேது இரண்டும் “நிழல் கிரகங்கள்” ஆகும். இவை கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் மனித வாழ்க்கையில் இந்த இரண்டு கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பெரிய அளவில் செயல்படுகிறது. நவக்கிரகங்களில் நம் கண்ணுக்குத் தெரிவது சூரியன், சந்திரன் ஆகும். இந்த சூரியன், சந்திரனை ராகு கேது பிடிக்கும் நிகழ்வே கிரகணம் ஆகும். ஆக ஒளிவிடும் கிரகங்களான சூரியன், சந்திரனையே பிடிக்கும். ஆற்றல் இந்த ராகு கேதுக்கு இருக்கையில் மனிதன் எல்லாம் எம்மாத்திரம் என்பதே கேள்வியாகும். இவர்கள் சூரியனையும் சந்திரனையும் மறைக்கும் நிகழ்வே “சூரிய கிரகணம்” மற்றும் சந்திரன் கிரகணம் ஆகும்.
இப்படிப்பட்ட விஷேச தன்மையைப் பெற்றுள்ள ராகு கேது பெயர்ச்சி ஒவ்வொருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன மாதிரியான நிகழ்வுகளை நடத்தப் போகிறார் என்பதுடன் அவர் ஏற்படுத்தும் நற்பலன்களையும் தீய பலன்களோடு வரும் “2016ம்” வருட ஆங்கிலப் புத்தாண்டில் ஏற்படும் ஒவ்வொரு லக்னதாரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை பொதுப்படையாக இங்கு விவரித்துள்ளோம்.
பஞ்சாங்கத்தில் இரண்டு வகையான பஞ்சாகங்கள் உண்டு. ஒன்று “வாக்யப் பஞ்சாங்கம்” என்பது மற்றொன்று “திருக்கணிதப் பஞ்சாங்கம்” என்பது ஆகும். வாக்யம் பஞ்சாங்கப்படி கோயில்களில் கிரகப் பெயர்ச்சி விழாக்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. இது வழிவழியாக கடைபிடிக்கப்படுவது. திருக்கணிதம் என்பது அன்றாடும் ஆகாயத்தில் நிலவும் கிரகங்களின் சுழற்சியின் அடிப்படையில் கணிக்கப்படும் கணித நிகழ்வாகும். நம் இந்திய அரசாங்கம் வெளியிடும் ராஷ்டிரியப் பஞ்சாங்கம் “திருக்கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட பஞ்சாங்கமாகும்.
இங்கு நாம் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி அவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும் பொழுது அதாவது சுமார் 1 ½ வருடத்திற்கு அவர் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்யும் பொழுது ஏற்படுத்தும் நற்பலன்களையும் தீய பலன்களையும் பொதுவாக இங்கு கணக்கிட்டுள்ளோம்.
இக்காலங்களில் 2016ம் ஆண்டும் சேர்ந்து வருவதால் 2016ம் வருடத்திற்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களையும் அத்துடன் ராகு கேது பெயர்ச்சி பலன்களையும் கணக்கிட்டு எழுதியுள்ளோம்.
பொதுவான “பலன்கள்’ என்றாலே ராசி மட்டுமே நம் நினைவுக்கு வரும். அதனால் தான் பெரும்பாலும் இதற்கு “ராசி பலன்கள்” என்று பெயர் வந்தது. பொதுவாக ராசி பலன்கள் என்றாலே அவரவர் ராசியின் அடிப்படையில் மட்டுமே பலன்கள் கூற முற்படுகையில் நாம் இங்கு ஒவ்வொருவரும் பிறந்த லக்னத்தின் அடிப்படையில் ராகு, கேது பெயர்ச்சி மற்றும் 2016ம் வருட ஆங்கில வருடத்திற்கான பலன்களை குறிப்பிட்டுள்ளோம்.
“லக்னம்” என்பது உயிர் ஆகும். “ராசி” என்பது உடல் ஆகும். இந்த உயிர் இல்லாமல் உடல் இயங்காது, எனவே உயிரின் அடிப்படையில் இங்கு பலன்கள் கூறப்பட்டுள்ளது. உங்கள் ஜாதகத்தில் எல்லோருக்கும் ராசி எது என்று தெரியும். அதே சமயம் “லக்னம்” எது என்றால் அநேகம் பேருக்குத் தெரியாது. இந்த “லக்னம்” என்பதை வைத்தே சகலவிதமான பலன்களும் நடைபெறும் என்பதே உண்மையாகும். எனவே தான் இங்கு “லக்னப்பலன்கள்” என்ற அடிப்படையில் பலன் உரைக்க உள்ளோம்.
உங்களுக்கு “லக்னம்” எது என்று அறிய உங்கள் ஜாதகக் கட்டத்தில் “ல” என்று எந்த ராசியில் குறிப்பிட்டுள்ளதோ அதுவே “லக்னம்” ஆகும். அது ஜாதகத்தில் எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசியின் பெயர் என்னவோ அதுவே உங்கள் லக்னம் ஆகும். அதன் அடிப்படையிலேயே பலன் கூறப்பட்டுள்ளது. எனவே உங்கள் ராசி எது என்பதை எப்படி அறிந்து கொண்டுள்ளீர்களோ அதே அளவு உங்கள் “லக்னம்” எது என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்வதே உத்தமம் ஆகும். எனவே பலன்கள் அறிவதற்கு லக்னம் ராசி இவை இரண்டையும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்வது நலம்.
இங்கு பொதுவான நற்பலன் மற்றும் தீயபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது பொதுப்பலனேயன்றி சிறப்புப் பலன் அல்ல. அவரவர் தனிப்பட்ட ஜாதகப்படி இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் வேறுபடும். எனவே ஒருவரது தனிப்பட்ட ஜாதகமே நன்மை, தீமைகளை எடுத்துரைக்க வல்லதாகும். அத்துடன் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு தசாபுத்திகள் நடந்து கொண்டிருக்கும். அவற்றின் பலன்கள் அவரவது தனிப்பட்ட ஜாதகப்படி நற்பலன்களை அளிக்கவல்லதாகவோ கெடுபலன்களை கொடுப்பாதகவோ அமையும். எனவே அவற்றையும் கணக்கில் கொள்ளல் வேண்டும்.
எனவே வாசகர்கள் தங்கள் சொந்த ஜாதகத்துடன் இந்தப் பலன்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேஷம்
எப்பொழுதும் வேகமும் விவேகமும் உடைய உங்கள் மேஷ லக்னத்திற்கு ராகு பகவான் 6ம் இடத்தில் இருந்து 5ம் இடமான சிம்மராசிக்குப் பெயர்ச்சியாவதால் உங்கள் இஷ்ட தெய்வத்தின் அனுகூலம் அதிகரிக்கும். வீட்டில் இதுகாறும் நடைபெறாமல் தடையாக இருந்த சுப காரியங்கள் இனிதே நடந்தேறும். மேலும் சிம்ம ராசியில் ஏற்கனவே குரு இருப்பதாலும் அவருடன் தற்பொழுது ராகும் சேர்வதாலும் குழந்தைகளால் நன்மையேற்படும். புதிய முயற்சிகளின் ஈடுபட வாய்ப்பு அமையும். அதில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியது வரும்.
தாயாரின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். தந்தையை விட்டுப் பிரிய வாய்ப்பு அமையும். தந்தையின் உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை கொடுக்கல் வாங்களில் அதிகக் கவனம் தேவை. தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. கொடுத்த பணம் திரும்ப வருவதில் சுனக்கம் ஏற்படும். அரசால் அல்லது அரசாங்கத்தால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலக சந்தர்ப்பங்கள் அமையும். போக்குவரத்து, வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை.
தேவையில்லமல் கடன் வாங்குதல் கூடாது, எதிலும் நிதானமாகச் செயல்படுதல் வேண்டும். கேது 11ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்களது விருப்பம் எண்ணம் ஆசை அபிலாஷைகள் பூர்த்தியாவதில் சற்று தடையேற்பட்டு நடக்கும். அடிக்கடி ஸ்தல யாத்திரை செல்ல வாய்ப்புகள் அமையும். பாஸ்போர்ட் விசா எதிர்பார்த்த நேரத்திற்குள் வந்து சேரும். அடிக்கடி பயணம் செய்ய வாய்ப்பு அமையும். அதனால் சில சமயங்களில் நன்மையும் ஏற்படும்.
குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும், குடும்பத்தில் புதிய வரவுகள் வர வாய்ப்புகள் அமையும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. பூர்வீக வீடு இருந்தால் அதை நல்ல விலைக்கு விற்க வாய்ப்பு அமையும். ஒரு சிலருக்குப் புதிய இடம், வீடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் மனம் ஈடுபடும்.
புதிய நட்பு அல்லது நண்பர்கள் வட்டம் உருவாகும். அதே சமயம் உயிருக்குயிரான நண்பர்களைப் பிரியவும் அவர்களால் மன வருத்தங்களும் ஏற்பட்டு விலகும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். வெளிநாட்டில் வேலைக்குச் செல்பவர்கள் வேலயை நன்கு விசாரித்து அதன்பின் செல்லவும்.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
வேலை என்றால் இங்கு அரசு மற்றும் தனியார் துறை அல்லது கம்பெனி இவற்றில் பணிபுரிவதைக் குறிக்கும். வேலையில் சற்று கவனம் தேவை. உயரதிகாரிகளிடம் வேலையில் சற்று கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் (V.R.S) வர வாய்ப்புகள் ஏற்படும். பார்க்கும் கம்பெனியை விட்டு விலகி வேறு கம்பெனிக்கு ஒரு சிலர் மாற வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த வேலையில் முன்னேற்றத்தில் தடை ஏற்படும். ஊதிய உயர்வில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு மனவருத்தங்கள் ஏற்படும். உங்களுடைய உழைப்பு மற்றவர்களுக்கு லாபகரமாக அமையும். வேலையில் மனம் ஈடுபடாது. ஒரு சிலர் பார்க்கும் வேலையை விட்டு சிறிது காலம் வெறுமனே பொழுதைப் போக்க வேன்டியது வரும்.
தொழில் (BUSINESS), வியாபாரம் (TRADE)
உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்கள் ஓரளவு லாபம் அடைவர். அதே சமயம் சிறுதொழில் சுயதொழில் புரிபவர்கள் சற்று போராட்டத்துக்குப்பின் முன்னேற்றம் அடைவர். ஒரு சிலருக்கு சுயதொழில் தொடங்க வாய்ப்புகள் அதிகரிக்கும் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. கடன் வாங்கி முதலீடு செய்தல் கூடாது. லாபம் சற்று சுமாராகவே இருக்கும். போக்குவரத்து சேவை, தகவல்தொடர்பு துறைகள் ஏற்றம் மிகுந்து காணப்படும். கமிஷன் ஏஜ்ன்ஸி புரோக்கர்ஸ் கன்சல்டன்சி சற்று சுமாராக இருக்கும். இரும்பு எஃகு உருக்கு ரசாயனம் மருத்துவம் சார்ந்த துறைகள் சற்று லாபகரமாக அமையும். ஆடை, ஆபரண அழகு சாதனப் பொருட்கள் துறை மேன்மையடையும். ரியல் எஸ்டேட் ஏற்றம் பெறும். பங்குச் சந்தையில் அதிகக் கவனம் தேவை. தேவையில்லாமல் முதலீடு செய்தல் கூடாது. முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் கல்வித் துறையில் இருப்பவர்கள் ஏற்றமடைவர். சாலையோர வியாபாரிகள் அலைந்து திரிந்து தொழில் புரிபவர்கள் எதிர்பார்த்த நன்மையடைவர்.
விவசாயம் :
விவசாயம் ஓரளவு நன்மைபயப்பதாக அமையும். விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்கும். புதிய தொழில் நுட்பத்தை புகுத்த வாய்ப்புகள் அமையும். அதே சமயம் கடன் வாங்க வேண்டி வரும். விவசாயத்திற்காக வண்டி வாகனங்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
அரசியல் :
அரசியல் வாழ்வில் அதிகக் கவனம் தேவை. உங்கள் லக்னத்திற்கு 5ம் இடத்தில் குருவும் ராகுவும் சஞ்சாரம் செய்து சனியும் பார்ப்பதால் அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை நன்கு ஆராய்ந்தே எந்த முடிவையும் எடுத்தல் வேண்டும். எதிரிகளால் அச்சுறுத்தல் ஏற்படும். பொதுஜன ஆதரவு நன்கு அமையும். சமூகத்தில் மதிப்பு சற்று குறையும்.
கலைஞர்கள் :
கலைத்துறையில் இருப்பவர்கள் ஓரளவு நல்ல லாபம் அடைவர். பெயர், புகழ், அந்தஸ்து ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றியும், அதனால் லாபமும் அதிகரிக்கும். ஆசைகள் பூர்த்தியாகும். பணவரவும் பொருள்வரவும் அதிகரிக்கும், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். விருதுகள் பெற ஒரு வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். பொருளாதார நிலை நன்கு அமைந்திருக்கும் புதிய ஒப்பந்தங்கள் நிறைவேறும். அதே சமயம் ஒரு சிலருக்கு அரசாங்கத்தால் துன்பங்களும் வந்து சேரும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் நன்மையடைவர்.
மாணவர்கள் :
மாணவர்களின் அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும், விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு ஏற்படும். விருந்து கேளிக்கை உற்சாகங்களில் ஈடுபட சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் பெற சந்தர்ப்பம் அமையும். கல்விக்கடன் கிடைப்பதில் தடையேற்படும் போக்குவரத்து வண்டி வாகனங்களில் கவனமுடன் சென்று வருதல் வேண்டும்.
பெண்கள் :
இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடைபெறும். திருமணம் நடக்க வாய்ப்புகள் அமையும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்யத்தில் தடையேற்பட்டுப் பின் குழந்தை பிறக்கும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பங்கள் கூடி வரும். வேலைக்குச் செல்பவர்கள் வேலையை விட்டுவிடலாம் என்று எண்ணத்தோன்றும். அலைச்சல்கள் அதிகரிக்கும் தேவையற்ற மனச்சோர்வும் உடல் அசதியும் அமையும். ஒரு சிலருக்கு “ஆன்சைட்” மூலம் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி உறவு சுமாராகவே இருக்கும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
உடல் ஆரோக்யம் :
உடலில், காது, புஜம், அடிவயிறு, இவற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சளித்தொல்லைகள் இல்லாமல் உடல் ஆரோக்யத்தைப் பேணுதல் வேண்டும். காய்ச்சல், தலைவலி, சற்று அதிகரித்து காணப்படும். நரம்பு சம்பந்தமான வியாதிகள் தேவையற்ற கவலைகள் மகிழ்ச்சியைக் கெடுக்கும்.
அதிர்ஷ்ட எண் : 5,8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, கருப்பு
அதிர்ஷ்ட நாள் : புதன், சனி
அதிர்ஷ்ட இரத்னம் : மரகதப் பச்சை, கருநீலக்கல்
பரிகாரம் :
சனிக்கிழமை தோறும் “ஆஞ்சநேயரை” வழிபட்டு வர நன்மை ஏற்படும். “குலதெய்வ” வழிபாடும் “இஷ்டதெய்வ” வழிபாடும் சிறப்பான பலனைத் தரும்.
ரிஷபம்:
எப்பொழுதும் புன்சிரிப்புடன் வலம்வரும் உங்கள் ரிஷப லக்னத்திற்கு ராகு 4ம் இடத்திற்கும் கேது பகவான் 10ம் இடத்திற்கும் பெயச்சியாவதால் தொழில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் கூடும். எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றியை அடையத் தீவிரமாக போராட வேண்டியது வரும். புதிய விஷயங்களைக் கற்பதிலும் அறிவதிலும் ஆர்வமும் சந்தர்ப்பமும் அதிகரிக்கும். உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். புதிய உறவுகள் வந்து சேரும். அதனால் நன்மைகள் ஏற்படும்.
இடம், வீடு, வண்டி வாகனங்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்புகள் கூடும். அதே சமயம் தொழில் தகராறு, தொழிலில் நிச்சயமற்ற தன்மையும் ஏற்படும். பார்க்கும் வேலையில் கவனம் தேவை. தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். கொடுக்கல் வாங்கல் சாதகமாக இருக்கும். பணப்புழக்கம் சரளமாக இருந்து கொண்டேயிருக்கும், கொடுத்த பணம் தவணை முறையில் வந்து சேரும், தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. எப்பொழுதும் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் நலம்.
கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்க வாய்ப்பு அமையும். பழைய கடனை அடைக்கப் புதிய கடன் வாங்க வேண்டியது வரும். எதிரிகள் விஷயங்களில் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக் கூடுமாகையால் அவர்கள் விஷயத்தில் அதிகக் கவனம் தேவை. கேது 10ம் இடத்தில் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். பாஸ்போர்ட் விசா கிடைப்பதில் சற்று காலதாமதமாகி பின் வந்து சேரும். விருந்து கேளிக்கைகளில் மன ஈடுபாடு சற்று குறைந்து காணப்படும்.
தாயின் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை. பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் தேவையற்ற மன உலைச்சல்களும் வேதனைகளும் மிகும். தந்தையாரால் நற்பலன்கள் ஏற்படும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடிய வாய்ப்பு அமையும். சனி 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் புதிய ஆண், பெண் நட்பு வட்டாரம் அதிகரிக்கும். அதனால் மனமகிழ்ச்சி கிட்டும். நண்பர்களால் மகிழ்ச்சியும் அவர்களால் நன்மையும் ஏற்படும். வெளிநாடு செல்வதில் சற்று சுணக்கம் ஏற்பட்டுப் பின் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். மனைவியின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும்.
உத்யோகஸ்தர்கள், வேலை (JOB)
ராகு, குரு, 4ம் இடத்திலும் கேது 10ம் இடத்திலும் சஞ்சரிப்பதால் வேலையில் சற்று கவனம் தேவை. இங்கு வேலை என்பது அரசு மற்றும் தனியார் துறையையும் குறிப்பிடும். அரசு ஊழியர்கள் வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். உயரதிகாரிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுமாகையால் சற்று கவனம் தேவை. வேலையில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு அமையும். ஒரு சிலர் பார்க்கும் வேலையை விட்டு வேறு வேலைக்கு செல்ல பேப்பர் போட வேண்டியது வரும். பார்க்கும் வேலையில் திருப்தியற்ற சூழ்நிலை நிலவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சரிவர அமையாது. வேலையில் ஒரு நிச்சயமற்ற தன்மை இருந்து கொண்டேயிருக்கும். “ஆன்சைட்” செல்வதில் சற்று தடையேற்பட்டு ஒரு சிலர் வேலையின் காரணமாக வெளிநாடு செல்வர்.
தொழில் (BUSINESS), வியாபாரம் (TRADE)
சுயதொழில் அல்லது கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு சற்று சுமாராகவே இருக்கும். ஒரு சிலர் புதிதாகத் தொழில் தொடங்க வாய்ப்புகள் அமையும். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்ய ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். சிறுதொழில் செய்ய ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து அமையும். சிறுதொழில் ஏற்றம் மிகுந்து தரும். உற்பத்தி சார்ந்த தொழில் சற்று சுமாராக இருக்கும். போக்குவரத்து, தகவல் தொடர்பு, கமிஷன் ஏஜென்சி, புரோக்கர்ஸ், கன்சல்டன்சி தொழில்கள் லாபகரமாக அமையும். ஏற்றுமதி இறக்குமதி சற்று சுமாராக இருக்கும். பங்குச்சந்தை சற்று சுமாராகவே இருக்கும். பங்குச் சந்தையில் பெரிய் அளவில் முதலீடு கூடாது. இடம், வீடு, இவற்றில் முதலீடு செய்யலாம். இரும்பு எஃகு சிமெண்ட் சுமாராகவும், நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் சற்று மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். ஆடை, ஆபரணம், ஓட்டல், கட்டுமானம், ரியல் எஸ்டேட் நன்கு அமையும், சிறுவியாபாரிகள் சாலையோர வியாபாரிகள் ஏற்றம் பெறுவர். சுற்றுலாத்துறை சற்று சுமாராகவும், கப்பல், மீன்பிடித் தொழில் சுமாராகவும் மருத்துவம் விஞ்ஞானம் போன்ற துறைகள் ஏற்றமுடன் விளங்கும். சுயதொழில் வீட்டில் வைத்து செயல்படும் தொழில்கள் நல்ல லாபகரமாக இருக்கும்.
விவசாயிகள்
விவசாயம் ஓரளவு சுமாராக இருக்கும், பெரிய அளவில் விளைச்சல் இல்லையென்றாலும் ஓரளவு பணப்புழக்கம் இருந்து கொண்டேயிருக்கும். ஒரு சிலர் தங்கள் நிலங்களை குத்தகைக்கு விடவேண்டியது வரும். நவீன விஞ்ஞான அடிப்படையில் பயிர் செய்ய வாய்ப்புகள் ஏற்படும். புதிதாக கடன் வாங்க சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் :
அரசியல் சற்று சுமாராகவே இருக்கும். ஏனெனில் உங்கள் லக்னத்திற்கு 4ம் இடத்தில் குரு, ராகு, சஞ்சாரம் அரசியல் வாழ்க்கைக்கு நல்லதல்ல. தேவையற்ற விஷயங்களால் மனவருத்தங்களும் வேதனைகளும் ஏற்படும். தேவையற்ற விஷயங்களில் தொண்டர்களின் அன்பும் அதரவும் அதிக அளவில் இருக்கும். ஆனால் பொதுமக்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். அரசியலில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும்.
கலைஞர்கள்
எதிர்பாராத நன்மைகள் ஏற்பட்டாலும் ஒரு சிலருக்கு பணத்தட்டுப்பாடு இருந்து கொண்டேயிருக்கும். விருதுகள் பரிசுகள் பெற சந்தர்ப்பம் அமையும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். சற்று சிரமங்களை அனுபவிக்க வேண்டியது வரும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். அவர்களால் நன்மையேற்படும்.
மாணவர்கள்
மாணவர்கள் கல்வி, விளையாட்டில் ஆர்வம் கூடும். எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க சந்தர்ப்பங்கள் அமையும். நல்ல மதிப்பெண்கள் பெற வாய்ப்பு கிட்டும். படிப்பின் காரணமாக வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும். கலைகளில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். உயர்கல்வி பயில வாய்ப்பும் புதிய படிப்பை படிக்க சந்தர்ப்பமும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிபெற சந்தர்ப்பமும் அமையும். கல்விக்கடன் உடனே கிடைக்கும் படிப்பில் அதிக நாட்டமும் ஆர்வமும் கூடும்.
பெண்கள் :
ஆலய தரிசனம் தெய்வ தரிசனம் அடிக்கடி அமையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் சற்று தடைகள் ஏற்படும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். குழந்தை பாக்யத்தில் சற்று தடையேற்பட்டு குழந்தை பிறக்கும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். அலைச்சல்கள் அதிகரிக்கும், குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகளில் கவனம் செலுத்துதல் வேண்டும். பேச்சில் நிதானம் தேவை. வேலையில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். அதே சமயம் உயரதிகாரிகளால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். குழந்தைகளால் மகிழ்ச்சி குறைந்து காணப்படும்.
உடல் ஆரோக்யம் :
உடலில் அசதி, சோர்வு சற்று நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது. அடிவயிறு, சிறுநீரகப் பிரச்சனை, கல் அடைப்பு போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு. சளித்தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் நலம்.
அதிர்ஷ்ட எண் - 6, 8
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, கருப்பு
அதிர்ஷ்ட நாள் - வெள்ளி, சனி
அதிர்ஷ்ட இரத்னம் - வைரம், கரு நீலக்கல்
பரிகாரம் :
புதன் கிழமை தோறும் “சிவனுக்கு” வில்வ இலையில் அர்ச்சனை செய்தல் நலம். சனிக்கிழமை தோறும் “ஆஞ்சநேயர்” மற்றும் “பெருமாளை” வணங்கி வர நற்பலன்கள் அதிகரிக்கும்.
மிதுனம் :
நல்ல அறிவும் புத்திக் கூர்மையும் உடைய மிதுன லக்னத்திற்கு 3ம் இடத்தில் ராகுவும் 9ம் இடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்வது நன்மையானது ஆகும். அடிக்கடி ஆலய தரிசனம் தெய்வ தரிசனம் செய்ய வாய்ப்பு அமையும். அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்புகள் அமையும். அதனால் நன்மைகள் ஏற்படும். பேச்சில் சாமர்த்தியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற வாய்ப்புகள் கூடும். சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கூடும். தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். புதிய உறவுகளால் நன்மையும் மகிழ்ச்சியும் அமையும்.
இடமாற்றம் மனமாற்றம் ஊர்மாற்றம் அமையும். எதிர்பாராத செய்திகள் சாதகமாக வந்து சேரும். பணவிஷயங்களில் சற்று கவனம் தேவை. பணப்புழக்கம் சரளமாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களைப் பற்றி பேசாமல் இருத்தல் உத்தமம். அடிக்கடி கடன் வாங்க வேண்டியது வரும். நிலம், வீடு, வண்டி, வாகனங்கள் நல்ல வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்புகள் அமையும்.
புதிய வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையின் காரணமாக வெளியூர், வெளிநாடுப் பயணம் ஒரு சிலருக்கு அமையும். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். தெய்வ அனுகூலம் கிட்டும்.
உயர்கல்வி பயில வெளியூர் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பும் தந்தையாரின் அன்பும் ஆதரவும் அமையும். விசா பாஸ்போர்ட் ஆகியவை வந்து சேரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும் அமையும். இதுவரை நடக்காமல் தள்ளிப்போன திருமணங்கள் சீக்கிரம் நிச்சயத்தில் முடிந்து திருமணமும் நடந்தேறும். வீட்டில் சுபகாரியங்கள் அடிக்கடி நடந்தேறும்.
நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். பக்கத்து வீட்டு நண்பர்களின் ஆதரவு அமையும். எதிர்பார்த்த செய்திகள் எதிர்பாராத செய்திகள் இரண்டும் சாதகமாக வந்து சேரும். புதிய நட்பு வட்டம் உருவாகும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகளும் ஆதரவும் கிட்டும். எதிரிகளால் எப்பொழுதும் பிரச்சனை இருந்து கொண்டேயிருக்கும். குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை அமையும். காதல் கனிந்து ஒரு சிலருக்கு திருமணம் நடந்தேறும் எதிர்பார்த்த டைவர்ஸ் கிடைப்பதில் குழப்பம் மிகுந்து காணப்படும். வழக்குகள் இழுபறியாகவே அமையும்.
உத்யோகம், வேலை (JOB)
இங்கு அரசு மற்றும் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களை உத்யோகத்தில் இருப்பவர்கள் என்று குறிப்பிடுகின்றோம். வேலையில் ஒரு சிலருக்கு உத்யோக உயர்வும் ஏற்படும். ஒரு சிலருக்கு உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் அமையும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். எதிர்பார்த்த துறையில் வேலை அமையும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். வேலையை விட்டு வேறு வேலைக்கு அவசரப்பட்டு செல்லுதல் கூடாது. பார்க்கும் வேலையை உற்சாகமாகச் செய்ய வாய்ப்பு அமையும். “ஆன்சைட்” கண்டிப்பாக அமையும். ஒரு சில தடைகள் ஏற்பட்டாலும் ‘ஆன்சைட்” மூலம் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அதிகரிக்கும்.
தொழில் (BUSINESS), வியாபாரம் (TRADE)
உங்கள் லக்னத்திற்கு 7ம் அதிபதி குரு 3ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் தொழில் ஒரளவு நன்கு அமையும். சுயமாக அல்லது கூட்டாகச் சேர்ந்து தொழில் செய்பவர்கள் ஓரளவு லாபம் அடைவர். புதிய தொழில்கள் தொடங்க ஆட்கள் வந்து சேர்வர். அதனால் நன்மையேற்படும். சிறுதொழில் புரிபவர்கள் ஓரளவு தங்கள் தொழில் லாபம் அடைவர். சாலையோர வியாபாரிகள் தலைச்சுமையாளர்கள் ஏற்றம் பெறுவர். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சாதகமாக இருக்கும். தகவல் தொடர்பு, போக்குவரத்து, கமிஷன், ஏஜென்சி, கான்ட்ராக்ட், புரோக்கரேஜ், ரியல் எஸ்டேட் தொழில்கள் லாபகரமாக அமையும். உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று சுமாராக இருக்கும். பெரிய தொழில்களில் முதலீடு செய்வதில் கவனம் தேவை. மருத்துவம், பொறியியல் துறைகள் ஏற்றம் பெறும், உணவு, உடை, ஓட்டல், அழகு சாதனப் பொருட்கள் சார்ந்த துறைகள் ஏற்றம் பெறும். மருந்து கெமிக்கல் துறை சற்று சுமாராக இருக்கும். இரும்பு எஃகு சிமெண்ட் உற்பத்தி சற்று சுமாராகவே இருக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்வதில் சற்று கவனம் தேவை. ஷேர் மார்க்கெட் சற்று சுமாராகவே இருக்கும்.
விவசாயம் :
விவசாயம் ஓரளவு சாதகமாக இருக்கும். பயிர்கள் நன்கு செழித்து வளரும். ஆனால் விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்காது. புதிதாக கடன் வாங்க வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்த முயற்சி செய்வர். பணப் புழக்கம் சற்று சுமாராகவே இருக்கும்.
அரசியல் :
அரசியல் நிலைமை சற்று சாதகமாகவே இருந்து வரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பதவி அந்தஸ்து கிட்டும். அரசால் ஆதாயம் அமையும். சமூக வாழ்வும் பொது வாழ்விலும் அதிகக் கவனம் தேவை. எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். பொது மக்களின் ஆதரவு சற்று சுமாராகவே இருக்கும். அரசாங்கத்தால் ஒரு சிலருக்கு தேவையற்ற மன உலைச்சல்கள் அதிகரிக்கும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து கொண்டேயிருக்கும்.
கலைஞர்கள் :
கலைஞர்கள் ஏற்றம் பெற்று வாழ்வர். பணப்புழக்கம் நல்லபடியாக இருந்து வரும். அடிக்கடி வெளியூர் பிரயாணங்கள் அமையும். அதனால் நன்மைகள் ஏற்படும். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் வலம்வர வாய்ப்புகள் அமையும். புதிய ஒப்பந்தங்கள் அமையும். இசை, சினிமா, நாடகம், நாட்டியம், ஓவியம், சிற்பம், ஜோதிடம் மகிழ்ச்சிகரமாக அமையும் சின்னத்திரை உற்சாகமாக இருக்கும்.
மாணவர்கள் :
விளையாட்டில் ஆர்வமும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் விளங்க வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த மதிப்பெண் கிட்டும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் சேர வாய்ப்புகள் அமையும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும். ஒரு சிலருக்கு வெளிநாட்டில் உயர்கல்வி பயில வாய்ப்புகள் உருவாகும். கல்விக்கடன் ஒரு சிலருக்கு உடனே கிடைக்கும். ஆராய்ச்சி மற்றும் உயர்படிப்புகளில் சேர்ந்து படிக்க வாய்ப்புகள் அமையும். படித்துக் கொண்டே ஒரு சிலர் வருமானம் ஈட்ட வாய்ப்புகள் தேடி வரும்.
பெண்கள் :
தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருக்கும். அதே சமயம் கணவனால் சகாயமும் ஆதாயமும் ஏற்படும். அடிக்கடி அலைச்சல்கள் இருந்து கொண்டேயிருக்கும் உடலில் சோர்வு அசதி அடிக்கடி தோன்றி மறையும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்யம் கிட்டும். இரண்டாவது திருமணம் செய்ய ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளால் தேவையற்ற மன உலைச்சல்களும் வேதனைகளும் மிகும். உடன் பணிபுரிபவர்களின் நட்பும் ஆதரவும் கிட்டும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அமையும். இடமாற்றம் வீடுமாற்றம் அமைய சந்தர்ப்பங்கள் அமையும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் வந்து சேரும்.
உடல் ஆரோக்யம் :
தலை, மார்பு, புஜங்கள், தோல்பட்டை இவற்றில் தேவையற்ற வலிகளும் அடிவயிற்றில் பிரச்சனைகளும் தோன்றி மறையும். சளித் தொல்லை இல்லாமலும் நோய் வருவதற்கு முன் நல்லவிதமாக உடல் நலனைப் பேணுதல் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் - 8, 9
அதிர்ஷ்ட நிறம் - கருப்பும் சிவப்பு
அதிர்ஷ்ட நாள் - சளி, செவ்வாய்
அதிர்ஷ்ட ரத்னம் - கருநீலக்கல், பவழம்
பரிகாரம் :
வெள்ளிக்கிழமை தோறும் “மஹாலெஷ்மியை” வணங்கி வருதல் நலம். சனிக்கிழமை “ஆஞ்சநேரையும்” “காயத்ரி” தேவியையும் வழிபடுதல் நற்பலன் அளிக்கும்.
கடகம்:
எப்பொழுதும் வெற்றியையும் தங்கள் காரியத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கும் உங்கள் கடக லக்னத்திற்கு 2ம் இடத்தில் ராகு சஞ்சாரம் செய்வதும் கேது 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதும் ஒரு பக்கம் உச்சபலத்தையும் மறுபக்கம் சற்று சுமாரன பலனையும் அளிக்கவல்லதாகும். 2ம் இடத்தில் குரு சஞ்சாரம் செய்யும் காலத்தில் ராகுவும் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் கௌரவம் அந்தஸ்து கூடும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் அமையும். அதே சமயம் கேது 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. கொடுத்த கடனை கேட்டால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் தான் மிஞ்சும்.
எதிர்பார்த்த செய்திகள் சற்று தாமதமாக வந்து சேரும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் மனவருத்தங்களும் வேதனைகளும் மிகும். உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடன்பிறந்தோர்களுக்கு சுபகாரியம் நடக்க வாய்ப்புகள் அமையும். இருக்கும் பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாத்தல் வேண்டும். இல்லையேல் அவை கையை விட்டுப் போய்விடும். பழைய பொருட்களைக் கொடுத்துப் புதிய பொருட்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். சுறுசுறுப்பும் உற்சாகமும் தொற்றிக் கொள்ளும்.
உழைப்புக்கேற்ற வருமானமோ ஊதியமோ வருவதில் தடையேற்படும். கேது 8ம் இடத்தில் சஞ்சரிப்பதால் தந்தையாரின் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை. அரசாங்கத்தால் தேவையற்ற தொந்தரவுகளும் மனநிம்மதியற்ற சூழ்நிலையும் உருவாகும். கடன் வாங்கி வட்டி கட்ட வாய்ப்புகள் கூடும். கடன் அடைபடுவதில் தடைகள் இருந்து கொண்டேயிருக்கும்.
குழந்தைகளின் அன்பும் ஆதரவும் நன்கு அமையும். வேலையின் காரணமாக இடமாற்றம் அமையும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இருந்து கொண்டேயிருக்கும். குழந்தைகள், பேரன், பேத்திகள் போன்ற புது உறவுகள் வந்து சேரும். வழக்குகளால் தேவையற்ற பயமும் மனநிம்மதியற்ற சூழ்நிலையும் உருவாகும். தாயரால் நன்மையேற்படும். நண்பர்களால் மகிழ்ச்சியும் ஆதரவும் கிட்டும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற நிம்மதியிழப்பு ஏற்படும். பேச்சில் அதிகக் கவனம் தேவை. காதல் வாழ்க்கை ஆரம்பத்தில் இனித்தாலும் முடிவில் சுவையாக இராது. காதல் நிறைவேறுவதில் நிறையத் தடைகள் ஏற்படும். காதலால் தேவையற்ற மனக்குழப்பமும் விரக்தியும் அமையும்.
உத்யோகம் (JOB)
அரசு வேலை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களையும் வேலை என்ற பொருளில் இங்கு குறிப்பிடப்படுகிறது. இதுவரை வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல வேலை அமையும். வேலையில் உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும். ஒரு சிலருக்கு அரசால் தேவையற்ற தொல்லைகளும் வரவேண்டிய பணங்கள் முடக்கப்படும் நிலையும் உருவாகும். தனியார் துறையில் இருப்பவர்கள் வேலையில் ஏற்றம் பெறுவர். எதிர்பார்த்த “ஆன்சைட்” மூலம் நல்ல கம்பெனிக்கு விரும்பிய நாட்டிற்கு செல்ல ஒரு சிலருக்கு சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். வேலையை விட்டு அடுத்த கம்பெனி வேலைக்குச் செல்வதற்குள் நன்கு யோசித்து செய்ல்படுதல் வேண்டும்.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
உங்கள் லக்னத்திற்கு 7ம் இடத்து அதிபதி சனி 5ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சுயதொழில் சற்று சுமாராகவே இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சுணக்கம் ஏற்படும். பணம் பொருள் மொத்தமாக முடங்கிக் கொள்ளும் அல்லது மாட்டிக் கொள்ளும். கொடுக்கல் வாங்கலில் அதிகக் கவனம் தேவை. பொருட்களை தேவையில்லாமல் கொள்முதல் செய்தல் கூடாது. லாபம் குறைவாக இருந்தாலும் உடனே விற்று விடுதல் ஓரளவு நன்மை உண்டாகும். சிறுதொழில் சுயதொழில் கூட்டுத் தொழில் உற்பத்தி சார்ந்த தொழில் அனைத்தும் சற்று சுமாரகவே இருக்கும். அதே சமயம் பங்குச்சந்தை சற்று ஏற்றமுடன் இருக்கும். இருப்பினும் ஷேர் மார்க்கெட்டில் முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. உணவு, ஆடை, ஆபரணத் தொழில்கள் ஏற்றம் பெறும். தகவல் தொடர்பு. போக்குவரத்து, வண்டிவாகனங்கள், ரியல் எஸ்டேட் ஏற்றம் மிகுந்து காணப்படும். சாலையோர வியாபாரம் கமிஷன், ஏஜென்ஸி சுமாராக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதியில் அதிகக் கவனம் தேவை. நிதி, நீதி, வங்கி, கல்வி ஏற்றமுடன் விளங்கும்.
விவசாயம் :
விவசாயம் ஓரளவு சாதகமாக அமையும். விளைச்சலுக்கேற்ற எதிர்பார்த்த விலை ஓரளவு கிடைக்கும். பழைய கடனை அடைக்கப் புதிய கடன் வாங்க வேண்டியது வரும். ஒரு சிலர் புதிய நிலங்கள் வாங்கவும் வாய்ப்புகள் அமையும்.
அரசியல் :
அரசியல் வாழ்வு ஏற்றம் மிகுந்து காணப்படும். சமுதாயத்தில் பெயர், புகழ், கூடும். பொதுவாழ்வும் சமுதாய வாழ்வும் நன்மையேற்பட்டாலும் ஒரு சிலருக்கு அராங்கத்தால் பிரச்சனைகளும் வழக்குகளும் இருந்து கொண்டேயிருக்கும். தொண்டர்களின் அன்பும் ஆதரவும் நன்கு கிட்டும். பொது வாழ்க்கையில் பலரால் பாராட்ட வாய்ப்பும் அமையும். தேர்தலில் வெற்றி பெறுவதில் நிறையத் தடைகள் ஏற்படும்.
கலைஞர்கள் :
கலைத்துறை ஏற்றம் மிகுந்து காணப்படும். நாடகம், சினிமா, ஓவியம், சிற்பம், ஜோதிடம், வளர்ச்சி அபரிதமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அமையும். ஆனால் பணப்புழக்கம் சுமாராகவே இருக்கும். ஒரு சிலருக்கு பட்டங்களும் விருதுகளும் கிட்டினாலும் பொருளாதார நிலையில் சற்று எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். சின்னத்திரை சிறப்பாக இருந்தாலும் அதில் இருப்பவர்களுக்கு சுமாராகவே இருக்கும்.
மாணவர்கள் :
மாணவர்கள் கல்வியில் அதிக நாட்டம் கொள்வர், தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது. ஏனெனில் கேது 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் அசிங்கம் அவமானங்களை உண்டுபண்ணிவிடுவார். எனவே எதிலும் கவனம் தேவை. உயர்கல்வி பயில்வதில் சற்று தடையேற்பட்டு பின் கல்வி தொடரும். படிப்பின் காரணமாக ஒரு சிலர் வெளியூர் வெளிநாடு செல்வர். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் கூடும். உடற்பயிற்சி செய்தல் நன்மை பயக்கும். விளையாட்டில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் அதிகரிக்கும்.
பெண்கள் :
எண்ணிய செயல் ஈடேறும் காலமிது. இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன திருமண விஷயங்கள் இனிதே நடைபெறும். குழந்தை பாக்யத்தில் இருந்து வந்த தடை நீங்கி மழலைச் செல்வம் பிறக்க சந்தர்ப்பங்கள் அமையும். அடிக்கடி வெளியூர் செல்ல வாய்ப்பு அமையும். அலைச்சல்கள் கூடும். அதனால் உடல் சோர்வும் மனச்சோர்வும் அமையும். புதிய விஷயங்களைக் கற்பதிலும் அதை செயல்படுத்துவதிலும் ஆர்வமும் உற்சாகமும் கூடும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். வேலைக்குப் போகும் பெண்களுக்கு வேலையில் முன்னேற்றமும் உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் அமையும். ஒரு சிலர் கம்பெனி அல்லது வேலை மாற வேண்டியது வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நட்பும் கிட்டும். உயரதிகாரிகள் விஷயத்தில் தேவையில்லாமல் வாய்விட்டு அவஸ்தைப் படுவைதக் குறைத்துக் கொள்ளல் வேண்டும்.
உடல் ஆரோக்யம் :
சர்க்கரை நோய் இருப்பவர்கள் நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது. சளித்தொல்லைகள் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். கண், மூக்கு கால் போன்ற உடல் உறுப்புகளில் தேவையில்லாத வலி வேதனை வந்து போகும். அடிவயிற்றில் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட எண் : 3, 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட நாள் : வியாழன், செவ்வாய்கிழமை
அதிர்ஷ்ட இரத்னம் : மஞ்சள், புஷ்பராகம், பவழம்
பரிகாரம் :
“செவ்வாய்க்கிழமை” தோறும் “முருகனை” வழிபடுதல் நன்மையேற்படும். அத்துடன் “இஷ்டதெய்வம்” மற்றும் “குலதெய்வம்: வழிபாடும் நன்மைதரும்.
சிம்மம்:
எதிலும் முதன்மையாக தலமையேற்று நடத்தும் உங்கள் லகனத்திலேயே ராகு வந்து அமர்வதும் கேது உங்கள் லக்னத்திற்கு 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதும் ஓரளவு சிறப்பாகும். ஏற்கனவே குரு லக்னத்தில் இருக்க அவருடன் ராகு சேர்க்கை ஓரளவு நற்பலன்களை அளிக்கவல்லதாகும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். அதில் சற்று தடையேற்பட்டாலும் இறுதியில் சுமூகமாக நடந்தேறும். பணவரவும் பொருள்வரவும் சுமாராக இருந்து வரும். உங்கள் லக்னத்தை சனி 10ம் பார்வையாகப் பார்ப்பதால் எதிர்பாராத தனவரவும் பொருள்வரவும் அமையும். அதே சமயம் தேவையற்ற மனவருத்தங்களும் அபவாதங்களும் வந்து சேரும்.
அடிக்கடி பிரயாணம் செய்ய நேரிடும். அதனால் நற்பலன்கள் ஏற்படும். சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியம் நடக்க வாய்ப்புகள் அமையும். வீட்டில் இதுகாறும் நடைபெறுமால் தள்ளிப்போன குழந்தைபாக்யம் ஒரு சிலருக்கு கிட்டும். நெருங்கிய உறவினர்களால் நன்மையேற்படும். எப்பொழுதும் சுறுசுறுப்புடன் மகிழ்ச்சியுடன் செயல்படத் தூண்டும் வகையில் வாழ்க்கையில் மாற்றங்கள் அமையும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். பாஸ்போர்ட், விசா, உடனடியாக வந்து சேரும். தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
காதல் விஷயங்களில் ஈடுபட்டு மனதை அலைக்கழித்தல் கூடாது. காதல் நிறைவேறுவதில் நிறையத் தடைகள் ஏற்பட்டு விலகும். வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்பதால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். கடன் கிடைப்பதில் சற்று சுணக்கமான சூழ்நிலை அமையும். தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. வீட்டு வளர்ப்புப் பிராணிகளில் குறிப்பாக நாயால் மனவருத்தங்கள் ஏற்படும்.
குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். அதே சமயம் குழந்தைகளால் மனவருத்தங்களும் ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். நண்பர்களால் சகாயமும் ஆதாயமும் கிட்டும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராகாவே இருக்கும். எதிலும் நிலையற்ற தன்மையும் மகிழ்ச்சியற்ற சூழ்நிலையும் அமையும். விருந்து கேளிக்கைகளில் மனம் ஈடுபடும். உங்கள் லக்னத்திற்கு 7ல் கேது பகவான் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவி இருவரும் தேவையற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுதல் கூடாது. அதனால் மனவருத்தங்களும் வேதனைகளும் மிகும். அடிக்கடி ஆலய தரிசனம் செய்ய வாய்ப்புகள் வந்து சேரும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த விவகாரத்துக்கள் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்படும்.
உத்யோகம், வேலை (JOB)
வேலை என்பது இங்கு அரசு மற்றும் பெயர்போன தனியார் கம்பெனிகளில் சம்பளம் பெறுவதைக் குறிக்கும். அதாவது அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் மாதச் சம்பளம் பெறுவதைக் குறிக்கும். சிம்ம லக்னத்திற்கு 6ம் இடத்து சனி 4ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் வேலையில் திருப்தியற்ற தன்மை இருந்து கொண்டேயிருக்கும். உயரதிகாரிகள் விஷயத்தில் கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும். அவசரப்பட்டு வேறு கம்பெனிக்கு “பேப்பர்” போடாமல் சற்று நிதானமாகவே வேலையில் கவனம் செலுத்துதல் வேண்டும். எந்தக் கம்பெனியில் வேலை பார்த்தாலும் வேலையில் சற்று திருப்தியற்ற சூழ்நிலையே நிலவும். ஒரு சிலருக்கு உத்யோக உயர்வும் அதே சமயத்தில் ஊதிய உயர்வும் ஒரு சேர வந்து சேரும். “ஆன்சைட்” செல்ல ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் வாய்க்கும். அதனால் நற்பலன்களே நடந்தேறும் சக ஊழியர்களால் நன்மையும் ஆதரவும் கிட்டும்.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
சிம்ம லக்னத்திற்கு 7ம் இடத்தில் கேது சஞ்சாரம் செய்வதால் சுயதொழில் சற்று கவனம் தேவை. 7ம் இடம் என்பது சொந்தமாகவோ அல்லது பார்ட்னரோடு சேர்ந்து பண்ணும் தொழிலைக் குறிக்கும். எனவே தொழில் கூட்டாளிகளோடு தேவையில்லாமல் மனவருத்தங்கள் வந்து சேரும். புதிய தொழில்கள் தொடங்குவதில் சற்று நிதானம் தேவை. தேவையில்லமல் முதலீடு செய்தல் கூடாது. பங்குச்சந்தையில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சற்று சிரமம் ஏற்படும். எனவே ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. பால், பழம், காய்கறிகள், ஆடை, ஆபரணம், பிளாஸ்டிக், உணவு, வெள்ளி வியாபாரங்கள் சாதகமாக அமையும். போக்குவரத்து தகவல் தொடர்பு கமிஷன் ஏஜென்ஸி, கன்சல்டன்ஸி, ஐ.டி துறைகள் சாதகமாகவும், புரோக்கரேஜ் சற்று சுமாராகவும் ரியல் எஸ்டேட் உயர்ந்தும் காணப்படும். மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம், நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ், கல்வித் துறைகள் லாபகரமாகவும், சிறுதொழில் சுயதொழில் புரிபவர்களுக்கு சற்று சுமாராகவும் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதியில் கவனம் தேவை.
விவசாயம் :
விவசாயம் சற்று சுமாராக இருக்கும். விளைச்சல் பரவாயில்லாமல் அமையும். விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்காது. பணப்புழக்கம் நன்கு அமையும். ஒரு சிலருக்கு புதிய விளை நிலைங்கள் வாங்க சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அமையும். நீண்ட தூரப் பயணம் செய்ய வாய்ப்புகள் அமையும்.
அரசியல் :
அரசியல் வாழ்வு ஏற்ற இறக்கமுடன் இருந்து வரும். மக்கள் சக்தி ஆதரவு இருப்பது போல் தோன்றினாலும் தேர்தலில் போட்டியிட்டால் தோலிவியே மிஞ்சும். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் இருந்து கொண்டேயிருக்கும். யாரையும் எளிதில் நம்பி காரியத்தில் இறங்குதல் கூடாது. தொண்டர்களின் ஆதரவும் அன்பும் வலுவாக இருந்து கொண்டேயிருக்கும்.
கலைஞர்கள் :-
கலைத்துறை ஏற்றம் மிகுந்து காணப்படும். ஒரு சில கலைஞர்களுக்கு பட்டங்களும் விருதுகளும் வந்து சேரும். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்க வாய்ப்பு அமையும். புதிய ஒப்பந்தங்கள் அடிக்கடி ஏற்படும். பொருளாதார சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். நிதி நிலைகள் ஒரே சீராக இருக்கும். இசை, நாடகம், சினிமா, ஓவியம், சிற்பம், சின்னத்திரை ஏற்றம் பெறும். அடிக்கடி வெளியூர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். கடன்கள் வழக்குகள் கவலை அளிப்பதாக ஒரு சிலருக்கு அமையும். உடல் ஆரோக்யத்திலும் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும்.
மாணவர்கள் :
புதிய விஷயங்களை அறிவதும் அவற்றை கற்பதிலும் ஆர்வம் அதிகரிக்கும். விருந்து கேளிக்கைகளை குறைத்துக் கொள்ளுதல் நலம். எதிர்பார்த்த பள்ளி கல்லூரி அமையும். எதிர்பார்த்த மதிப்பெண்கள் வந்து சேரும். விளையாட்டு, டி.வி. சினிமா இவற்றைக் குறைத்தல் நலம். உயர்கல்வி பயில ஒரு சிலர் வெளிநாடு செல்லவும் யோகம் ஏற்படும். சீரான நடைப் பயிற்சியும் உடல்பயிற்சியையும் மேற்கொள்ளுதல் வேண்டும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்துதல் கூடாது.
பெண்கள் :
வீட்டில் சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புகள் அமையும் இதுவரை நடக்காமல் தள்ளிப்போன திருமணம், குழந்தை பாக்யம் போன்ற மகிழ்ச்சிகரமான விஷயங்கள் இனிதே நடந்தேறும். ஒரு சிலருக்கு விவகாரத்தும் இரண்டாவது திருமணமும் நடைபெறும். அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்புகள் அமையும். தெய்வ தரிசனம் ஆலய தரிசனம் கிட்டும். மனம் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்ளும். குழந்தைகளால் தேவையற்ற பிரச்சனைகளும் மனவருத்தங்களும் வந்து சேரும். வேலை பார்க்கும் பெண்களுக்கு வேலையில் முன்னேற்றம் அமையும். ஒரு சிலருக்கு ஊதிய உயர்வு கிட்டும். உயரதிகாரிகளால் தேவையற்ற மனவேதனைகளும் பிரச்சனைகளும் சக ஊழியர்களின் அன்பும் நட்பும் கிட்டும். பொதுவாக தேவையில்லாத விஷயங்களில் பேச்சைக் குறைத்தல் உத்தமம். உடலில் சளித் தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் அவசியம் அலைச்சைல்கள் அதிகரிக்கும்.
உடல் ஆரோக்யம் :
உடலில் அடிவயிறு, கால் போன்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். தலை, பல் போன்ற உடல் உறுப்புகளில் அதிகக் கவனம் தேவை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். சத்தான காய்கறிகள் பழங்கள், கீரைகள் உட்கொள்ளுதல் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 6, 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, கருப்பு
அதிர்ஷ்ட நாள் : வெள்ளி, சனி
அதிர்ஷ்ட இரத்னம் : வைரம், கருநீலக்கல்
பரிகாரம் :
“வியாழக்கிழமை” தோறும் படைப்புக் கடவுளான “ஸ்ரீ பிரம்ம தேவரை” வழிபடுதல் நன்மை பயக்கும். “குலதெய்வ” வழிபாடும் “அம்பாள்” வழிபாடும் சிறப்பானதாகும்.
கன்னி:
எப்பொழுதும் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் உங்கள் லக்னத்திற்கு ராகு பகவான் 12ம் இடத்திலும் கேது 6ம் இடத்திலும் சஞ்சாரம் செய்வதால் வராத பணம் அல்லது நிலுவையில் உள்ள பணங்கள் வந்து சேரும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். அதே சமயம் தேவையில்லாத அலைச்சல்களும் இடஞ்சல்களும் வந்து சேரும். 6ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் கேது கேட்ட இடத்தில் பணம் கிடைக்க வைப்பார். 12ம் இடத்து ராகு தேவையற்ற விரயங்களைக் கொடுத்து மனம் சஞ்சலப்பட வைப்பார்.
பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும் கொடுக்கல் வாங்கல் சற்று சுமாராகத்தான் இருக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றிபெறக் கடுமையாக முயற்சி செய்ய வேண்டியது வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அதிக உற்சாகத்துடன் காணப்பட்டாலும் சிலசமயம் தேவையற்ற மனச்சஞ்சலங்களும் ஏற்பட்டு விலகும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மையேற்படும். உடன் பிறந்தவர்களுக்கு வேலை அல்லது சுபகாரியம் நடந்தேறும். நெருங்கிய உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் வந்து சேரும்.
அடிக்கடி அலைச்சல்களால் நன்மையும் அதே சமயம் உடலில் அசதியும் சோர்வும் வந்து சேரும். மனை, வீடு, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்புகள் அதிகரிக்கும். விருந்து கேளிக்கைகளில் மனம் ஈடுபடும். அதனால் நன்மைகள் வந்து சேரும். குழந்தைகள் பிறக்கவும் குழந்தைகளால் எதிர்பார்த்த எதிர்பாராத நன்மைகளும் வந்து சேரும். 6ல் உள்ள கேது வழக்குகளில் வெற்றி பெறச் செய்வார். அதே சமயம் ராகு 12ல் அமர்ந்து வெற்றியை முழுமையாக அனுபவிக்க வாய்ப்பில்லாமல் செய்வார். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நன்மையேற்படும்.
அரசாங்கத்தால் நன்மைகள் கிடைக்கும். பாஸ்போர்ட், விசா சீக்கிரம் எதிர்பார்த்த காலத்திற்குள் வந்து சேரும். வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வந்து சேரும். ஒரு சிலருக்கு இடமாற்றம் மனை மாற்றம் ஊர் மாற்றம் அமையும். தாயாரின் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை. பழைய சொத்துக்களை விற்று புது சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். ஒரு சிலருக்குப் பதிவுத் திருமணம் அமையும். அதே சமயம் பிரிந்து வாழ வாய்ப்பு ஏற்படும். “டைவர்ஸ்” விரும்புகிறவர்களுக்கு சீக்கிரம் விவகாரத்து கிடைக்கும். ஒரு சிலருக்கு புது வாழ்க்கை அமையும். உயில் மூலம் சொத்துக்கள் அல்லது எதிர்பாராத தனவரவு கணவன் அல்லது மனைவியின் மூலமாகவும் பொருள்வரவு ஒரு சிலருக்கு அமையும். தந்தையாரால் நன்மையேற்படும். தந்தையின் அன்பும் ஆதரவும் கிட்டும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்
வேலை அல்லது உத்யோகம் (JOB)
உத்யோகம் என்பது இங்கு அரசு வேலை மட்டும் தனியார் துறையில் வேலை செய்வதையும் குறிக்கும் எனவே இரண்டையுமே உத்யோகம் அல்லது வேலை என்று தான் குறிப்பிட்டுள்ளோம். இதுவ்ரை வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லையென்றாலும் கிடைத்த வேலையில் முதலில் அமர்தல் வேண்டும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். வேறு கம்பெனிக்கு “பேப்பர்” போடுவதற்கு முன் நன்கு ஆராய்ந்து “பேப்பர்” போடுதல் வேண்டும். ஏனெனில் ஒரு சிலருக்கு கம்பெனி மாற வேண்டிய சூழ்நிலை உள்ளது. “ஆன்சைட்” செல்ல வாய்ப்பு இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டும் அதனால் நன்மையேற்படும். ஒரு சிலருக்கு புதிய சூழ்நிலையில் வேலை செய்ய வாய்ப்பு அமையும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது. உயரதிகாரிகளால் தேவையற்ற மனக்குழப்பங்களும் வருத்தங்களும் வந்து சேரும். எனவே வேலையில் கவனம் தேவை. வேலைப்பளுவும் சற்று அதிகரித்துக் காணப்படும்.
தொழில் (BUSINESS), வியாபாரம் (TRADE) :
7ம் அதிபதி குரு 12ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் சுயதொழில் அல்லது கூட்டுத் தொழிலில் அதிகக் கவனம் தேவை. பெரிய அளவில் முதலீடு செய்தல் கூடாது. பார்ட்னர்ஷிப்பில் தேவையற்ற மனக்குழப்பங்களும் வேதனைகளும் மிஞ்சும். சிறுதொழில் சுயதொழில் புரிபவர்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள் அதிகக் கவனமுடன் செயல்படுதல் வேண்டும். தேவையற்ற முதலீடுகள் வேண்டாம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் நல்ல லாபம் அடைவர். தொழில் அதிபர்கள் நல்ல லாபம் அடைவதில் சற்று சுணக்கம் ஏற்படும். பத்திரிக்கை, செய்தி, போக்குவரத்து தகவல் தொடர்பு ஏற்றமுடன் அமையும். கமிஷன், ஏஜென்ஸி, கன்சல்டன்ஸி, ரியல் எஸ்டேட் பரவாயில்லாமல் அமையும். ஆடை, ஆபரணம், உணவு சார்ந்த துறைகள் இரும்பு, எஃகு சிமெண்ட் துறைகள் லாபம் உண்டாகும். நிதி, நீதி, வங்கி இன்சூரன்ஸ் கல்வித் துறைகள் ஏற்றமுடன் விளங்கும். பால் நீர், தயிர் மீன்பிடித் துறைகள் உயர்ந்தும் நெசவு, பட்டாசுத் தொழில்கள் சுமாராகவும் இருக்கும். தெருவோர வியாபாரம் சற்று சுமாராக அமையும். பங்குச்சந்தை நல்ல லாபகரமாக அமையும். ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் சாதகமாக அமையும்.
விவசாயம் :
விளைச்சலுகேற்ற விலை கிடைக்கும், புதிய இடம் அல்லது நிலங்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். நல்ல லாபம் உண்டாகும், பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்க சந்தர்ப்பம் அமையும். பணப்புழக்கம் சீராக இருந்து வரும். பணப்பயிர்களால் நல்ல லாபம் கிட்டும்.
அரசியல் :
பொது வாழ்வில் இருப்பவர்கள் அரசியலில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலமாகும். பொது ஜனத் தொடர்பும் தொண்டர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். புதிய பதவிகள் ஒரு சிலருக்கு வந்து சேரும். எதிரிகளால் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும்.
கலைஞர்கள் :
சினிமா, இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், ஜோதிடம், போன்ற துறைகளில் இருப்பவர்களுக்குப் பெயரும் புகழும் வந்து சேரும். புதிய ஒப்பந்தகள் கையெழுத்தாகும், சின்னத்தைரையில் பெயருடனும் புகழுடனும் விளங்க வாய்ப்புகள் வந்து சேரும். பணச்சுழற்சி சீராக இருக்கும். ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது. விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் நல்ல பெயருடன் பரிசுகளை வெல்ல வாய்ப்புகள் அமையும்.
மாணவர்கள் :
படிப்பில் ஆர்வமும் உற்சாகமும் அதிகரிக்கும். அதே சமயம் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உற்சாகமும் கூடும். எதிர்பார்த்த பள்ளி அல்லது கல்லூரிகளில் படிக்க வாய்ப்புகள் அமையும். படிப்பின் காரணமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் வீடு மாற்றம் அமையும். புதிய சூழ்நிலையில் படிக்க வாய்ப்பு அமையும். கல்விக்கடன் உடனே கிடைக்கும். வெளிநாட்டில் சென்று படிக்க சந்தர்ப்பக்களும் அமையும்.
பெண்கள் :
அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும், ஆன்மீக விஷயங்களில் மனம் ஈடுபடும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற மனக்குழப்பங்களும் வேதனைகளும் மிஞ்சும் இதுவரை நடக்காமல் தள்ளிப்போன திருமணம் நடக்க சந்தர்ப்பம் அமையும். காதல் கனிந்து திருமணத்தில் முடிய வாய்ப்புகள் ஏற்படும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருக்கும். குழந்தைகளால் நன்மையும் தீமையும் கலந்தே காணப்படும். குழந்தைகளுக்கான சுபகாரியங்கள் நல்ல விதமாக நடந்தேறும். “டைவர்ஸ்” எதிர்பார்த்தவர்களுக்கு டைவர்ஸ் சீக்கிரம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். உயரதிகாரிகளால் தேவையற்ற பிரச்சனைகளும் மனவருத்தங்களும் ஏற்பட்டு விலகும். நணபர்களின் உதவிகள் கிட்டும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தே காணப்படும்.
உடல் ஆரோக்யம் :
சளித்தொல்லைகள், வைரஸ் காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ளுதல் நலம். மேலும் தலை, புஜங்கள், அடிவயிற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். முட்டி, கால் போன்ற உடல் உறுப்புகளில் அதிகக் கவனம் தேவை. உணவில் நல்ல சத்தான உணவு வகைகளைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். உடலில் ஒரு சிலர் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளல் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 6, 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, கருப்பு
அதிர்ஷ்ட நாள் : வெள்ளி, சனி
அதிர்ஷ்ட இரத்னம் : வைரம், கருநீலக்கல்
பரிகாரம் :
சனிக்கிழமை “சனிபகவான்” அல்லது “ஆஞ்சநேயரை” வழிபட்டு வருதல் நலம். மேலும் வெள்ளிக்கிழமை “மஹாலெஷ்மியை” வணங்கி வர நற்பலன்கள் அதிகரிக்கும்.
மீனம்:
தெய்வ சிந்தனையும் மற்றவர்களுக்கு உதவுவதில் விருப்பமும் உடைய உங்கள் மீன லக்னத்திற்கு ராகு பகவான் 6ம் இடத்திலும் கேது பகவான் 12ம் இடத்திலும் பெயர்ச்சி ஆகி சஞ்சாரம் செய்வது நற்பலன் ஆகும். இதுவரை இருந்து வந்த தடங்கள்கள் விலகி எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். பேச்சில் சற்று கவனம் தேவை. பணப்புழக்கம் நன்கு அமையும். உடன்பிறந்த சகோதர சகோதரர்களின் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்த அளவு அமையும். அவர்களுக்கு இதுவரை நடக்காமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும்.
நெருங்கிய உறவினர்களால் பிரச்சனைகளும் போராட்டங்களும் ஏற்பட்டு விலகும். பழைய இடத்தை விற்று புதிய இடம் வாங்க வாய்ப்புகள் அமையும். தேவையற்ற மனச்சஞ்சலங்களும் போராட்டங்களும் அமையும். கடன் வாங்க வாய்ப்புகள் அமையும். புதிய உறவுகளால் தேவையற்ற நிம்மதியிழப்பு ஏற்படும். தாயாரின் உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அமையும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் மனம் ஈடுபடும். காதல் விஷயங்கள் சாதகமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் அமையும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும். மனம் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும்.
கொடுக்கல் வாங்கலில் அதிகக் கவனம் தேவை. நம் பணம் பொருள் நம் கண்முன்னே மாட்டிக் கொள்ளும் அல்லது முடங்கிக் கொள்ளும் காலமிது. எனவே உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல் கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும். விட்டதைப் பிடிக்கும் எண்ணத்தில் கவனம் தேவை. சுபகாரியங்கள் செய்ய கடன் வாங்க வேண்டியது வரும். வெளிநாட்டு தொடர்பால் நன்மைகள் உருவாகும். கணவன் மனைவி உறவு சற்று சுமாரகவே இருக்கும். தந்தையின் அன்பும் ஆதரவும் கிட்டும். மூத்த சகோதர சகோதரிகளால் நன்மைகள் ஏற்படும். நண்பர்களால் மகிழ்ச்சியும் ஆதாயமும் அமையும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. நீண்டதூர ஸ்தல யாத்திரை செய்ய வாய்ப்பு அமையும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் எதிர்பாராமல் வந்து சேரும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும்.
உத்யோகம், வேலை (JOB)
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களையும் உத்யோகஸ்தர்கள் அல்லது வேலையில் இருப்பவர்கள் என்ற பொருளில் நாம் இங்கு குறிப்பிட்டுள்ளோம். இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு இனி வேலை கிடைக்கும். கிடைத்ட வேலையும் ஓரளவு திருப்தியாக இருக்கும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு பணிமாற்றம் இடமாற்றம் ஏற்படும். 6ம் இடத்தில் குரு ராகு சஞ்சாரம் செய்வதால் பணிபுரியும் இடத்தில் உங்களைப் பற்றிய வீண் வந்தந்திகளை பரப்புவர். எனவே எதிலும் கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும். “ஆன்சைட்” செல்வதில் போராட வேண்டியதிருக்கும். உயரதிகாரிகளால் எப்பொழுதும் தேவையற்ற பிரச்சனைகளும் நிம்மதியற்ற சூழ்நிலைகளும் நிலவும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு எதிர்பார்த்தபடி அமையும். வேலையில் எப்பொழுதுமே ஒரு திருப்தியற்ற சூழ்நிலை மிகுந்து கொண்டேயிருக்கும்.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
சிறுதொழில் புரிபவர்களுக்கு சற்று தொழில் சுமாரகவே இருந்து வரும். அதே சமயம் சுயதொழில் கூட்டுத் தொழில் புரிபவர்கள் எதிர்பார்த்த அளவில் லாபம் அடைவர் உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களும் எதிர்பார்த்த லாபம் அடைவர். பிளாஸ்டிக், வெள்ளி, லெதர், அழகு சாதனப் பொருள், பால், உணவு, ஆயத்த துறைகள் நல்ல ஏற்றமுடன் காணப்படும். செய்தி, போக்குவரத்து ஐ.டி. நிதி. நீதி, நிர்வாகம், இன்சூரன்ஸ் துறைகள் நல்ல ஏற்றமுடன் காணப்படும். ரியல் எஸ்டேட் கமிஷன், ஏஜென்ஸி, கான்ட்ரக்ட், கன்சல்டன்சி, துறைகள் ஓரளவு லாபமுடன் காணப்படும். பங்குச் சந்தை சற்று சுமாரகவே இருந்து வரும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. தெருவோர வியாபாரம் சற்று லாபகரமாக அமையும்.
விவசாயம்
விளைச்சலுக்கேற்ற விலை ஓரளவுக்குத்தான் விலை கிடைக்கும். நல்ல மகசூல் கிடைக்கும். நெல், கரும்பு, வாழை லாபகரமாக அமையும். ஏலம், பழங்கள், தேயிலை, காய்கறிகள், விலை ஏறுமுகமாக அமைவதால் ஓரளவு லாபகரமாக இருக்கும். பணப்புழக்கம் சற்று கூடுதலாகவே இருந்து வரும். விவசாயக்கடன் பயிர்க்கடன் கிடைக்க வாய்ப்புகள் அமையும். புதிதாக நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும்.
அரசியல்
அரசியல் வாழ்வு ஏற்ற இறக்கமுடன் இருக்கும். தேர்தலில் நின்றால் வெற்றி கிடைக்க சற்று போராட வேண்டியது வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். தொண்டர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் இருந்து கொண்டேயிருக்கும் வழக்குகள் சாதகமாக இராது. வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும்.
கலைஞர்கள்
கலைத்துறை ஓரளவு சற்று ஏற்றமுடன் இருந்து வரும். சினிமா, இசை, நடிப்பு, நாடகம், ஓவியம், சிற்பத் துறைகள் சிறந்து விளங்கும். புதிய ஒப்பந்தங்கள் அமையும். விளம்பரங்கள் மூலம் ஓரளவு நன்மையேற்படும். சின்னத்திரை சிறந்து விளங்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்லவும் வாய்ப்பு அமையும். அடிக்கடி பிரயாணங்கள் ஏற்பட்டு அலைச்சல்களும் அதிகரிக்கும். பணப்புழக்கம் சற்று சுமாராகவே இருந்து வரும். பட்டங்கள், விருதுகள் கிடைக்கும்.
மாணவர்கள்
போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறச் சூழ்நிலை அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்பட வாய்ப்புகள் அமையும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் கூடும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் எச்சரிக்கையுடன் செய்ல்படுதல் வேண்டும். எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். விரும்பிய பாடங்களும் விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும் சூழ்நிலையும் கனிந்து வரும்.
பெண்கள்
இதுவரை வீட்டில் நடவாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். திருமணம், குழந்தைபாக்யம் போன்ற சுபநிகழ்வுகள் குடும்பத்தில் நடந்தேறும். பெண் வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு வில்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்பும் கணவன் மனைவி உறவு சற்று சுமாராகவும் இருந்துவரும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் வந்து சேரும் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடலில் சோர்வும் அசதியும் அடிக்கடி தோன்றும். வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் அமையும். ஒரு சிலருக்கு “ஆன்சைட்” அமைய வாய்ப்பும் அதனால் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வந்தமையும். உயரதிகாரிகளால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை அமையும். சத்தான உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும்.
உடல் ஆரோக்யம்
உடலில் சளித் தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். முதுகு, கைகள், இருதயம் பகுதிகளில் பாதிப்பு என்றாலும் உடனே நல்ல மருத்துவரை அணுகுதல் வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். உடலில் உப்பு, சர்க்கரை சத்து இருப்பின் அளவுடன் அதைக் கையாளுதல் வேண்டும். ஜீரண உறுப்புகளில் பிரச்சனைகள் வராமல் கவனித்துக் கொள்ளல் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 1, 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மஞ்சள்
அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு, வியாழன்
அதிர்ஷ்ட ரத்தினம் : மாணிக்கம், மஞ்சள் புஷ்பராகம்
பரிகாரம்
“திங்கள்கிழமை” தோறும் “சிவன் கோயில்” சென்று “அம்பாளை” தரிசனம் செய்தல் நலம். மேலும் செவ்வாய்க்கிழமை “முருகனை” வணங்கிவர நற்பலன்கள் ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை வாய்ப்பிருந்தால் “நாகூர்” தர்க்கா சென்று வரவும்.
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்,ராகு,கேது,ராகு - கேது பெயர்ச்சி 2016,raghu kethu peyarchi palangal 2016 ,